|
வ
வி-கு :-
கஞ்சனை - கம்சனானவன். மயக்கமாகக்கொள்ளாது,
நேரே பொருள் கோடலுமாம். துஞ்சுதல் - இறத்தல்.
ஈடு :- ஐந்தாம்
பாட்டு. 1அவதரித்து, கம்சன் அறியாதபடி வளர்ந்து கம்சனை மாய்த்தபடியை இன்று
இருந்து அநுபவிக்கப் பெற்ற எனக்கு ஓர் எதிர் இல்லை என்கிறார்.
தேவர் இரக்க வேண்டி
வந்து பிறந்ததும் - 2‘எங்கள் அளவு அறியாதே ஒருவனுக்கு வரம் கொடுத்து அவனை உயரப்
பார்த்தோம்: எங்களுக்குக் குடி இருப்பு அரிதாயிற்று’ என்று தேவசாதி கப்படம் கட்டிக்கொண்டு செல்ல3
“தந்தையாக அடையவேண்டும் என்று விரும்பினார்” என்கிறபடியே, தான் விருப்பமுள்ளவனாய், வந்து
பிறந்ததுவும், அன்றிக்கே, 4“என்னுடைய மாயையாலே” என்னும் படி அன்றோ என்னுதல்.
என்றது, என்னுடைய இச்சையாலே என்றபடி. 5‘மாயா வயுனம் ஞானம்’ என்பது நிகண்டு.
6இரக்கிறவர்கள் அளவு பார்த்தல், தன்னளவு பார்த்தல் செய்கையன்றிக்கே வந்து
பிறந்தபடி காணும் இவரை வருத்துகிறது. 7தான் இரப்பாளனாய்க் காரியம் செய்யுமவன்,
பிறர் இரந்தால் பொறுக்கமாட்டானே
1. “காண்டல் இன்றி வளர்ந்து”
என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. தேவர்கள் இரக்கும் பிரகாரத்தைக்
காட்டுகிறார் ‘எங்கள் அளவு’ என்று
தொடங்கி. கப்படம் - வறுமையைக் காட்டுகின்ற உடை. கப்பறையுமாம்.
3. “தத: பத்மபலாசாக்ஷ:
க்ருத்வா ஆத்மாநம் சதுரவிதம்
பிதரம் ரோசயா மாஸ ததா
தசரதம் ந்ருபம்”
என்பது, ஸ்ரீராமா. பால. 15 : 30
1/2. வேண்டிவந்து - விரும்பிவந்து.
4. வேறும் ஒரு பொருள்
அருளிச்செய்கிறார் ‘என்னுடைய’ என்று தொடங்கி.
“ப்ரகிருதிம் ஸ்வாம் அதிஷ்டாய
ஸம்பவாமி ஆத்ம மாயயா”
என்பது, ஸ்ரீ கீதை, 4 : 6.
5. ‘மாயை’ என்ற சொல்,
இச்சை என்ற பொருளில் வருவதற்கு மேற்கோள்
காட்டுகிறார் ‘மாயா வயுநம் ஞானம்’ என்று.
‘மாயை’ என்னும் சொல்
ஞானத்தைக் காட்டி, அதனுடைய நிலைவேறுபாடான இச்சையை
உணர்த்தும் என்றபடி.
6. “வந்து பிறந்ததும்” என்கிறவருடைய
மனோபாவத்தை அருளிச்செய்கிறார்
‘இரக்கிறவர்கள்’ என்று தொடங்கி. இரக்கிறவர்கள் அளவு -
‘ஈஸ்வரோகம்’
என்றிருத்தல் முதலான குற்றங்கள். தன்னளவு - தன் பெருமை.
7. இருவர்
அளவும் பாராமல் வந்து பிறக்கைக்குக் காரணம் யாது? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘தான் இரப்பாளனாய்’ என்று தொடங்கி.
|