|
New Page 1
பொ-ரை :-
ஏழ்கடலும் ஏழ்மலையும் உலகு ஏழும் ஒக்கக் கழியச்
செலுத்தி, முடியத் தேரைக் கொண்டு சென்ற ஆச்சரியமும் முதலான மற்றும் பலவான ஆச்சரியமான செயல்களையுடைய,
சக்கரம் சங்கு இவற்றை வலக்கையிலும் இடக்கையிலுமாகவுடைய மால் வண்ணனை வேறுபடும்படி செய்கிற
பாசுரங்களைப் பாடுகின்ற நாக்கினையுடைய எனக்கு இந்த மண்ணின்மேல் ஒப்பாவார் உளரோ?
வி-கு :-
மால்வண்ணன் - கரிய நிறத்தை யுடையவன்.
மலக்குதல் - கலங்கச் செய்தல்.
ஈடு :- ஒன்பதாம்பாட்டு.
1வைதிக புத்திரர்களைக் கொண்டு வந்து தருதல் முதலான வெற்றிச் செயல்களையுடைய சர்வேசுவரனை
மலக்கும் நாவீறுடைய என்னோடு ஒப்பார் உளரோ? என்கிறார்.
கலக்க ஏழ்கடல்
ஏழ்மலை உலகுஎழும் கழியக் கடாய்-ஏழ்கடல் ஏழ்மலை உலகுஏழும் கலக்கக் கழியக் கடாய். கலக்க-ஒக்க:
அதாவது, தேரை நடத்துகிறபோது நீரோடு மலையோடு தறையோடு வாசி அற ஒக்க நடத்தினபடி. அன்றிக்கே,
கலக்க என்பதனைக் கடலுக்கு அடைமொழியாக்கி, கலங்குதலையுடைய கடல் என்று பொருள் கூறலுமாம். அங்ஙன
மன்றிக்கே, ஏழ்கடல் ஏழ்மலை உலகு ஏழையும் கழிய நடத்துகிறபோது அதிர நடத்தி என்றுமாம். கலக்க-அதிர.
உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும் - காரியமான தேரினைக் காரணமான மூலப்பகுதியிலே நடத்துகிற
இடத்தில் அழியாதபடி நடத்தின ஆச்சரியமும். உலக்க-முடிய. உட்பட மற்றும் பல-வைதிக புத்திரர்களை
இந்தத் தேசத்தினின்று கொண்டுபோருகையும், போன செவ்வியிலே கொடுவந்து கொடுக்கையும், காலையில்
செய்யவேண்டிய யாககாரியங்களைச் செய்து முடித்த பின்பு மத்தியானத்தில் செய்ய வேண்டிய காரியங்களைச்
செய்வதற்கு முன்பு இவை அடங்கலும் செய்கையும். வலம் கை ஆழி இடம் கைச் சங்கம் இவையுடை மால்
வண்ணனை மலக்கு நாவுடையேற்கு - 2இவ்விடத்தைப் பட்டர்
1. முதல் இரண்டு அடிகளையும்
கடாக்ஷித்து ‘வைதிக புத்திரர்களை’ என்று
தொடங்கியும், “மலக்கு நாவுடையேற்கு” என்றது முதலானவற்றைக்
கடாக்ஷித்து ‘மலக்கும் நாவீறுடைய’ என்று தொடங்கியும்
அருளிச்செய்கிறார்.
2. இடைப்பிறவரலாக
ஓர் ஐதிஹ்யம் அருளிச்செய்கிறார் ‘இவ்விடத்தை’ என்று
தொடங்கி.
|