பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
230

இல

இல்லாதவர்கள் ஆவதே நீங்கள். 1அதாவது, அவ்வூரில் புக்க பின்பு இவர்களுடன் வார்த்தை சொல்லத் தவிர்ந்தாளாயிற்று என்றபடி. 2“அழகானவளும் இனிய வார்த்தை பேசுகின்றவளும்” என்னும்படி காணும் இருப்பது. 3இதுகேட்க ஆசைப்பட்டிருக்குமவன் பெற்றுப் போனான். அமுதத்தினின்றும் வேறுபாடுதோற்ற ‘மென்மொழி’ என்கிறார்கள். கேட்பதற்குத் தக்கதாய் இராதே அமுதம்: வேணுமாகில் இனிமைக்கு ஒரு சொல்லுக்கு நிற்கிறது, மிருதுத்தன்மை இதற்கே உளதாமித்தனை.

    நீர் உமக்கு ஆசைஇன்றி அகற்றினீர் - இவள் பேச்சினைக் கேட்டுப்போகிற நீங்களே உங்களுக்கு இவள் வழிபடாதபடி செய்தீர் கோள். திமிர்கொண்டால் ஒத்துநிற்கும் - 4“செயல் அற்றவன் ஆகிறாய்” என்னுமாறுபோலே, அநுபவிக்கக்கூடிய விஷயத்தை அநுபவிக்கவும் மாட்டாதே செயல் அற்றவளாய் நில்லாநின்றான். அன்றிக்கே, “செயல்அற்றவன் ஆகிறாய்” என்கிறபடியே, பரிபூரணஞானிகளைப் போலே இராநின்றாள் என்னலுமாம். மற்று இவள்-இவள் இதற்குமேலே வார்த்தை சொல்லில். தேவதேவபிரான்

 

1. ‘அதாவது, அவ்வூரில்’ என்று தொடங்கும் வாக்கியத்துக்குக் கருத்து,
  தொலைவில்லிமங்கலத்தில் கொடு புகுகையாலே அங்கே ஈடுபட்டவளாய்
  இவர்களோடே வார்த்தை சொல்லுதல் தவிர்ந்தாள்; ஆகையாலே, இவள்
  பேச்சைக் கேட்டுக்கொண்டிராமல், அங்கே கொடுபுக்கு இவள் பேச்சை
  இழந்தீர்கோள் என்றபடி.

2. அவள் வார்த்தை இனிமையாக இருப்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
  ‘அழகானவளும்’ என்று தொடங்கி.

  “மதுரா மதுராலாபா கிமாஹ மம பாமிநீ
   மத்விஹீநா வராரோஹா ஹநுமந் கதயஸ்வமே”

  என்பது, ஸ்ரீராமா. சுந். 66 : 15.

3. “நீர் உமக்கு ஆசை இன்றி” என்கையாலே, இதற்கு, எதிர்மறையாக, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘இது கேட்க’ என்று தொடங்கி. வேறுபாடு எதனாலே?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘கேட்பதற்கு’ என்று தொடங்கி.

4. “திமிர்கொண்டால் ஒத்து நிற்கும்” என்பதற்கு, இரண்டுவகையாகக் கருத்து
  அருளிச்செய்கிறார். ஒன்று, அநுபவத்தின் மிகுதியால் செயல் அற்றவளாய்
  நிற்கிறாள் என்பது. இதனையே அருளிச்செய்கிறார் ‘செயல் அற்றவனாகிறாய்’
  என்று தொடங்கி. மற்றொன்று, பரிபூர்ண ஞானத்தாலே செயல் அற்றவளாய்
  நிற்கிறாள் என்பது. இதனையே அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று
  தொடங்கி.