பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
235

நித்தியாநுபவம் பண்ணுகிற ஊர். 1“வேதத்தை அத்யயனம் செய்வதனால் அவ்வேதத்தில் சொல்லப்படுகின்ற பரமாத்மாவின் தியானத்தைச் செய்யக்கடவன்” என்னுமளவன்றியே, “அந்த யோகத்தினால் தன்னால் அத்யயனம் செய்யப்படாத வேதபாகங்களின் பொருள்களைக் கண்டு மனனம் செய்யவேண்டும்” என்று ஆரூட யோகராயிருக்குமவர்கள். கண்டபின் - 2அவ்வூரில் வைஷ்ணவர்களும் அவனுமான சேர்த்தியைக் காட்டிக் கொடுத்துக் கெடுத்தீர்கோள். அற்கம் ஒன்றும் அற உறாள் - நம்சொல்வழி வந்திருக்கும் இருப்புத் தவிர்ந்தாள். அற்கம் - அல்குதல். அதாவது, அடக்கம். மலிந்தாள் - நம்மால் ஹிதம்சொல்லி மீட்க ஒண்ணாதபடி மிக்காள். என்றது, மீட்கைக்குத் தகுதியுமில்லாதபடி ஆனால் என்றபடி. அன்றிக்கே, எனக்கும் தெரியாதபடி இவள் பகவானிடத்தில் ஈடுபட்டிருத்தலில் விஞ்சினாள் கண்டீர் என்னுதல்.

    அன்னைமீர் - 3மீட்கத் தேடுகிற உங்களோடு இவள் கருத்து அறிந்தேனாகச் சொல்லுகிற என்னோடு வாசிஇல்லை தெரியாமைக்கு. நித்தியசூரிகள் யாத்திரை சம்சாரிகளுக்குத் தெரியிலன்றோ நமக்கு இவள் அளவு தெரிவது. கற்கும் கல்வி எல்லாம் கரும் கடல்வண்ணன் கண்ணபிரான் என்றே - சொல்லும் சொல்லெல்லாம் திருநாமமேயாய், அவற்றிலும் வடிவழகிற்கும் அடியார்கட்குப் பரதந்திரப்பட்டிருத்தற்கும் வாசகங்களான திருநாமங்களையே சொல்லாநின்றாள். 4“கிருஷ்ணனாகில் அடியார்கட்குப் பவ்யன்” என்பது பிரசித்தமன்றோ. அவ்வடிவழகைத் தாழநின்று இவளை அநுபவிப்பித்த உபகாரகனாதலின் ‘பிரான்’ என்கிறது. திருநாமங்களை இடைவிடாதே

 

1. வாழ்ச்சியைக் காட்டுகிறார் ‘வேதத்தை’ என்று தொடங்கி.

  “ஸ்வாத்யாயாத் யோகமாஸீத யோகாத் ஸ்வாத்யாயம் ஆமநேத்”

  என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 6 : 2. ஆரூடயோகர் -
  சித்தித்தயோகத்தையுடையவர்.

2. “கண்டபின் அற்கம் ஒன்றும் அற உறாள்” என்கிறவளுடைய
  மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘அவ்வூரில்’ என்று தொடங்கி.

3. ஆயினும், எங்களைக்காட்டிலும் அந்தரங்கமானவள் அன்றோ நீ? உனக்குத்
  தெரியாமை உண்டோ? என்ன, “மலிந்தாள்” என்ற பதத்தையும் கடாக்ஷித்து
  “அன்னைமீர்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘மீட்கத்தேடுகிற’
  என்று தொடங்கி. தெரியாமையின் முடிவின் எல்லையைக் காட்டுகிறார்
  ‘நித்திய சூரிகள்’ என்று தொடங்கி.

4. “கண்ணபிரான்” என்றால், ‘அடியார்கட்குப் பரதந்திரப்பட்டிருப்பவன்’
  என்பதனைக் காட்டுமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘கிருஷ்ணனாகில்’ என்று தொடங்கி,