பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
245

    ஈடு :- எட்டாம்பாட்டு. 1அந்த ஊரைத் தொழுத அன்று தொடங்கி இன்று அளவும் உண்டான இவளுடைய உருக்குலைந்த தன்மையைச் சொல்லுகிறாள்.

    திருந்து வேதமும் - வேதம் கட்டளைப்பட்டது அவ்வூரிலுள்ளார் கைக்கொண்ட பின்பாயிற்று. 2சொரூபம் ஞானமாத்திரம் என்கிற சுருதிகள், ஞாத்ருத்வ சுருதிகள், பேதாபேத சுருதிகள், சகுணசுருதிகள், நிர்க்குணசுருதிகள் இவை அடங்க விஷய வேறுபாட்டாலே ஒருங்கவிட்டிருக்குவமர்கள். வேள்வியும் - வைதிக சமாராதனமும். 3கற்ற கல்வி அநுஷ்டானத்திற்கு உறுப்பாய் இருக்கிறபடி.

 

1. “தொலைவில்லிமங்கலம் கைதொழுத அந்நாள் தொடங்கி” என்பது
  போன்றவைகளைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2. கட்டளைப்பட்ட பிரகாரத்தைக் காட்டுகிறார் ‘சொரூபம்’ என்று தொடங்கி.
  “ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம் பிரஹ்ம”, “விஜ்ஞாநம் பிரஹ்ம” என்பன
  போன்ற சுருதிகள், சொரூபம் ஞானமாத்திரமே என்பதனைத் தெரிவிப்பன.
  “யஸ்ஸர்வஞ்ஞ: ஸர்வவித்” என்பது போன்றவைகள், ஞாத்ருத்வசுருதிகள்.
  (ஞாத்ருத்வம் - அறிகின்றவனுடைய தன்மை.) “த்வாஸுபர்ணா”, “நித்யோ
  நித்யாநாம்”, “பதிம்விஸ்வஸ்ய” என்பன போன்றவைகள், பேத சுருதிகள்.
  “தத்வமஸி”, “ஸர்வம் கல்விதம் பிரஹ்ம” என்பன போன்றவைகள், அபேத
  சுருதிகள். “ஸோஸ்நுதே ஸர்வாந் காமாந்”, “அபஹத பாப்மா” என்பன
  போன்றவை, சகுண சுருதிகள். “நிஷ்களம் நிஷ்க்ரியம்”, “நிர்குணம்”,
  “நிரஞ்ஜனம்” என்பன போன்றவைகள், நிர்க்குண சுருதிகள்.

      ‘இவையடங்க விஷய வேறுபாட்டாலே ஒருங்க விட்டிருத்தலாவது,
  ‘சொரூபம் ஞானமாத்திரமே’ என்றது, ஞாத்ருத்வத்தை விலக்க வந்தது
  அன்று; “தத்குண சாரத்வாத் தத்வியபதேச: - ஞானமாகிற குணத்தைப்
  பிரதாநமாகவுடையதாய் இருக்கையாலே ஞானம் என்று சொல்லப்படுகிறது”
  என்கிறபடியே, ஞானத்தின் மிகுதியைக் குறிப்பதற்காகவும், சொரூபம்
  சுயம்பிரகாசம் என்று தோற்றுகைக்காகவும் கூறப்பட்டது என்றும்,
  பேதாபேத சுருதிகளில், பேத சுருதியே தத்துவார்த்தம்; அபேத சுருதி
  சரீர ஆத்ம்பாவம் தோற்றுகைக்காகச் சொல்லப்பட்டதித்தினை என்றும்,
  சகுண நிர்க்குண சுருதிகளில், சகுண சுருதியே தத்துவார்த்தம்; நிர்க்குண
  சுருதி சரீரத்தைப்பற்றி வருகின்ற தாழ்ந்த குணங்கள் இல்லாமையைச்
  சொல்லவந்தது; கல்யாண குணங்களை விலக்க வந்தது அன்று என்றும்
  இப்படி விஷய வேறுபாட்டாலே நிச்சயித்தல் என்றபடி.

3. “திருந்து வேதமும்” என்றதனைச் சார “வேள்வியும்” என்றதற்குக் கருத்து
  அருளிச்செய்கிறார் ‘கற்றகல்வி’ என்று தொடங்கி.