|
New Page 1
கைதொழுத அந்நாள்
தொடங்கி இந்நாள்தொறும் - 1திருவடி தொழுத அன்று தொடங்கி இன்றளவும் வர என்னுதல்;
தன்சத்தை உண்டான அன்று தொடங்கி இன்று அளவும் வர என்னுதல். “அஸந்நேவ - அசத்தைப்போல”,
“அன்று நான் பிறந்திலேன்” இதுவன்றோ முன்புற்றை நிலை. 2அவன் கையிலும் அன்றிக்கே,
பிறர்கையிலும் அன்றிக்கே, தன் கையதாயிருந்தபடி என் தான் தன் சத்தை! 3“தொழுது
எழு” அன்றோ. இருந்து இருந்து அரவிந்த லோசந! என்று என்றே - 4ஒருகால் அரவிந்தலோசந!
என்னும் போது, நடுவே பதின்கால் பட்டைப்பொதிசோறு அவிழ்க்கவேணும். 5வலி இன்மையாலே
சொல்லமாட்டாளோ? என்று இருக்கச் செய்தே, சொல்லித் தலைக்கட்டாநின்றாள். அவன் அரவிந்தலோசனன்,
இவள் கருந்தடங்கண்ணி. இருவரும் 6ஒருமுகத்திலே காணும் அகப்பட்டது. நைந்து
இரங்கும் - உருக்குலைந்து அழியாநின்றாள். 7சரீரத்தளவும் அன்றிக்கே, நெஞ்சும்
அழிகின்றது. இரக்கம் - ஈடுபாடு.
(8)
1. ‘திருவடி தொழுத அன்று தொடங்கி’
என்றது, அவ்வூரில் அவனைத்
திருவடி தொழுத அன்று தொடங்கி என்றபடி. ‘தன் சத்தை உண்டான
அன்று
தொடங்கி’ என்றது, மயர்வற மதிநலம் அருளப்பெற்ற அன்று
தொடங்கி என்றபடி. ஆயின், ஞானம் இல்லாதபோது
சத்தை இல்லையோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அஸந்நேவ’ என்று தொடங்கி.
‘அஸந்நேவ’ என்பது, தைத்திரீயுப. ஆன. 16. ‘அன்று நான்’ என்பது,
திருச்சந்த விருத்தம். 64.
2. “நா கிஞ்சித் குர்வதஸ்
ஸேஷத்வம் - கைங்கரியம் செய்யாதவனுக்குச்
சேஷத்வம் இல்லை” என்கிறபடியே, தொழுகையாகிற
கிஞ்சித் காரத்தைத்
திருவுள்ளத்தேகொண்டு அருளிச்செய்கிறார் ‘அவன் கையிலும்’ என்று
தொடங்கி,
என்றது, தொழுகையாகிற கிஞ்சித்காரத்தாலே சத்தை சித்திக்கும்
என்றுபடி. ணூிஞ்சித்காரம் - கைங்கரியய்.
3. அப்படித் தொழுதல் சத்திற்குக்
காரணமாக இருக்குமோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘“தொழுது எழு” அன்றோ’ என்று.
இது,
திருவாய். 1, 1 : 1.
4. “இருந்து இருந்து” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘ஒருகால்’ என்று
தொடங்கி. பட்டைப்பொதி சோறு - பாக்குப் பட்டையில்
கட்டிய சோறு;
தோட்கோப்பு.
5. “என்றே” என்ற ஏகாரத்திற்குப்
பொருள் அருளிச்செய்கிறார் ‘வலி
இன்மையாலே’ என்று தொடங்கி.
6. ‘ஒரு முகத்திலே’ என்றது,
பரஸ்பரம் கண்ணழகிலே என்றபடி.
7. நைதலுக்கும் இரங்குதலுக்கும்
வேறுபாடு காட்டுகிறார் ‘சரீரத்தளவும்’
என்று தொடங்கி.
|