பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
250

1பகவ

1பகவானுடைய குணங்களைக்காட்டிலும் குணநிஷ்டர் பாசுரம் அழிக்கும் போலே காணும்.

    மணிவண்ணவோ என்று கூவுமால் - 2இவளையோதான் நீங்கள் மீட்கப்பார்க்கிறது! வடிவழகைச் சொல்லியன்றோ கூப்பிடுகிறது. துரங்கம் வாய் பிளந்தான் உறை தொலைவில்லிமங்கலம் - 3பண்டு உபகரித்தவன் இப்போது உபகரிக்கைக்கு வந்து இருக்கிற தேசம். கேசிவாயினை வருத்தம் இன்றியே கிழித்தவன் வாழ்கின்ற தேசம். தொலைவில்லிமங்கலம் என்று தன்கரங்கள் கூப்பித்தொழும்-அத்தலை இத்தலை ஆவதே! என்கிறாள். 4தன் ஊரின் பெயரைச்சொல்ல எல்லாரும் கை எடுக்கும்படி பிறந்தவள் கண்டீர் தான் அவன் ஊரைச்சொல்லித் தொழுகிறாள். அன்றிக்கே, இக் கை கண்டார் தொழுமத்தனை என்றுபோலேகாணும் இவள் இருப்பது என்னுதல். 5தான் தொழுவது பெண்மைக்குப் போராதேயன்றோ. இதுதான் என்று தொடங்கி? என்னில், அவ்வூர்த் திருநாமம் கற்றதன் பின்னை - இவள் சொல் கற்ற பின்பு. 6திருநகரியிலுள்ளார் சொல் கற்பது, “திருத்தொலை வில்லிமங்கலம்” என்றுபோலே காணும்.

 

1. “மரங்கள் நின்று” என்று தொடங்கி மேேஒப்புமை சொல்லி, அதற்கே
  உயர்வு சொல்லுகிறார் ‘பகவானுடைய’ என்று தொடங்கி. என்றது, “வ்ருக்ஷா:
  பரிம்லாநா:” என்றவிடத்தில் சரீரத்திலுண்டான வாட்டமே சொல்லப்பட்டது.
  இங்கு, “இரங்கும்” என்று மனம் உருகுதல் சொல்லப்படுதலாலே, வேற்றுமை
  உண்டு என்றபடி.

2. “மணிவண்ணவோ” என்கிறவளுடைய மனோபாவத்தை அருளிச்செய்கிறார்
  ‘இவளையோதான்’ என்று தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார்
  ‘வடிவழகை’ என்று தொடங்கி.

3. ‘கேசியைக்கொன்றவன் வாழ்கிற தொலைவில்லிமங்கலம்’ என்றதற்கு, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘பண்டு உபகரித்தவன்’ என்று தொடங்கி.

4. கரங்கள் என்னாமல், “தன் கரங்கள்” என்று விசேடித்ததற்கு, இரண்டு
  வகையாகக் கருத்து அருளிச்செய்கிறார் ‘தன் ஊரின் பெயரை’ என்று
  தொடங்கி. ‘இக் கை கண்டார்’ என்று தொடங்கும் வாக்கியத்திற்குக்
  கருத்து, தன் கைகளின் அழகினைக்கண்டு ஈடுபட்டு அவன் தொழும் படி
  இருக்கக்கூடிய இவள் அன்றோ, இப்போது அவனைத் தொழுகிறாள்
  என்பது.

5. இவள் தான் தொழுவது குற்றமாமோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘தான் தொழுவது’ என்று தொடங்கி.

6. சொல் கற்ற பின்பு என்றால், “அவ்வூர்” என்று விசேடிப்பான் ஏன்? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘திருநகரியிலுள்ளார்’ என்று தொடங்கி.