த
திட்டாளோ? திருமகள்கொல்
- அங்ஙன் அன்றிக்கே, 1இந்த ஏற்றங்களைக் கொடுக்கும் பிராட்டி தானே பிறந்திட்டாளோ?
அன்றிக்கே, 2சர்வேசுவரனுடைய செல்வமாக இருக்குமவள் பிறந்திட்டாளோ? அச்செல்வம்
விளையும் பூமியாயிருக்குமவள் பிறந்திட்டாளோ? அவ்விளைபூமியினுடைய பல ரூபமாயிருக்குமவள் பிறந்திட்டாளோ
என்னுதல். 3அங்ஙன் அன்றிக்கே, அவர்களுக்கு இவள்படி இல்லாமையாலே அவர்கள் ஒப்பு
அல்லர்; உலகமெல்லாம் வாழுகைக்கு இவள் ஒருத்தி - பிறந்தாளோ? என்றுமாம். 4“வீரியத்தில்
விஷ்ணுவை ஒத்தவர்” என்றாற்போலே, நாய்ச்சிமார் பக்கலிலேயும் ஒவ்வொரு வகைக்கு ஒப்புச்
சொல்லலாயிருக்கையாலே கதிர் பொறுக்குகிறாள். 5“எல்லாச் சாதுக்களுக்கும் உபமானமாக
யாதொரு பிரஹ்லாதன் இருந்தானோ” என்கிறபடியே, இவரை எல்லார்க்கும் ஒப்புச்சொல்லலாம், இவர்க்கு
ஒப்பாவார் இலர் காணும்.
என்ன மாயம்
கொலோ - 6பகவத் விபூதியில் கூடாதது இல்லையாகாதே! இது என்ன ஆச்சரியம்தான்!
இவள் நெடுமால் என்றே நின்று கூவும் - தன்பிச்சினைக் காற்கடைக்கொண்டு அவன் பிச்சினைச்
1. ‘இந்த ஏற்றங்களை’ என்றது,
இவளுக்கு உண்டான ஏற்றங்களை என்றபடி.
2. மேலே அருளிச் செய்ததனை
ஒரு விசேடம் தோற்ற முறைமாற்றி
அருளிச்செய்கிறார் ‘சர்வேசுவரனுடைய என்று தொடங்கி.
3. “பிறந்திட்டாள்” என்றதனை,
மூவருக்கும் தனித்தனியே கூட்டிப் பொருள்
அருளிச்செய்தார் மேல். “பிறந்திட்டாள்” என்பதனை,
தனியே கொண்டு
பொருள் அருளிச்செய்கிறார் ‘அங்ஙன் அன்றிக்கே’ என்று தொடங்கி.
4. மூவரையும் ஒப்புச்
சொல்லுவான் என்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறாந் ‘வீரியத்தில்’ என்று தொடங்கி.
“விஷ்ணு நா ஸத்ருசோ லீர்யே
ஸோமவத் ப்ரிய தர்சந:”
என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 18.
5. முற்றுவமை சொன்னால்
என்? எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘எல்லாச் சாதுக்களுக்கும்’ என்று தொடங்கி.
“உபமாநம் அஸேஷாணாம்
ஸாதூநாம் யஸ்ஸதாபவத்”
என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1, 15 :
156. முதல் பத்து, திருமகள் கேள்வன்
ஒன்று, பக். 22. பார்க்கவும்.
6. மேலேகூறிய
இருவகைப் பொருள்களுள், இரண்டாவது பொருளைக்
கடாக்ஷித்துத் தோழியின் ஈடுபாடாக அருளிச்செய்கிறார்
‘பகவத் விபூதியில்’
என்று தொடங்கி. என்றது, மிக்க விலக்ஷணையான இவள் இந்த உலகத்திலே
திருவவதரிக்கையாலே,
பகவத் விபூதியில் இது என்ன ஆச்சரியம் என்றபடி.
|