பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
263

னுக

னுக்கு. நீடு உலகு உண்ட திறம் கிளர் வாய் - 1வேறு ஒருவர்வாயாலே கேட்கவேண்டாதே, இவன் வாயாலே சொல்லக் கேட்கலாம்படி. சிறுக்கள்வனவர்க்கு - 2வடிவில் சிறுமையும் ரக்ஷிக்குந் தன்மையில் பாரிப்பும் இருக்கிறபடி. தன்னுடைய ரக்ஷிக்கும் தன்மையையும் அகடிதகடநா சாமர்த்தியத்தையும் காட்டியாயிற்று இவளை அகப்படுத்திற்று.

    கறங்கிய சக்கரக் கையவனுக்கு-பகைவர்களை அழிக்கவேண்டும் விரைவாலே எப்பொழுதும் சுழலாநின்றுள்ள திருவாழியைத் திருக்கையிலேயுடையவனுக்கு: 3தான் ரக்ஷகனான அளவன்றியே, பரிகரமும் ரக்ஷணத்திலே முயற்சியோடு கூடி இருக்கிறபடி. 4அவன் கைப்பிடித்தார் எல்லாரும் ரக்ஷணத்திலே விரைவுடையராயன்றோ இருப்பது. 3ஸ்ரீ பாஞ்சஜன்ய ஆழ்வானும், “ஒரு வினை உண்டாகவற்றே, நாம் வாய்க்கரையிலே நின்று ஓசையை விளைத்து வினை தீர்க்க” என்று பிரார்த்தியாநிற்கும். என் பிறங்கு இரும் கூந்தல் - சுற்றுடைத்தாய் ஒழுகு நீண்ட மயிர்முடியையுடையவள். அன்றிக்கே, மிகவும் பெரிய குழலையுடையவள் என்றுமாம். இருமை - பெருமை. இங்குப் பெருமையாவது, நீட்சி. பிறங்குதல் - மிகுதல். கூந்தல் - மயிர். “கூந்தல் ஐம்பால். . . . . .குழல்” என்பது, திவாகரம், மக்கள் பெயர். 6எதிர்த்தலையைத் தோற்பிக்கும் குழலையுடையவள் கண்டீர் தன்பெருமையை இழந்தாள். பீடு - பெருமை.

 

1. ரசோக்தியாக அருளிச்செய்கிறார் ‘வேறு ஒருவர்’ என்று தொடங்கி.

2. வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார் ‘வடிவில் சிறுமையும்’ என்று
  தொடங்கி. ‘ரக்ஷிக்குந்தன்மையில் பாரிப்பு’ என்றது, “நீடு உலகு உண்ட’
  என்றதனைத் திருவுள்ளம்பற்றி.

3. “கறங்கிய’ என்ற விசேடணத்துக்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘தான்
  ரக்ஷகனான’ என்று தொடங்கி.

4. மற்றையோறில் இவனுக்கு உள்ள வேறுபாட்டினை அருளிச்செய்கிறார்
  ‘அவன் கைப்பிடித்தார்’ என்று தொடங்கி. என்றது, மற்றையோர் ஒருவருக்கு
  ஒன்றனைக் கொடுக்கப் புக்கால் பரிகரங்களாயிருப்பார் தடை செய்வார்கள்
  அல்லரோ; இவனுக்கு அங்கனம் இல்லை என்றபடி.

5. ஆனால், ஸ்ரீ பாஞ்சஜன்ய ஆழ்வானுக்கு ரக்ஷணத்தில் விரைவு
  இல்லையே? என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார் ‘ஸ்ரீ பாஞ்சஜன்ய
  ஆழ்வானும்’ என்று தொடங்கி.

6. கூந்தலை வர்ணித்ததற்கு, பாவம் அருளிச் செய்கிறார் ‘எதிர்த்தலையை’
  என்று தொடங்கி.