|
New Page 1
முறித்த தனியற்கு. என்றது,
நம்பிமூத்தபிரானை ஒழியவே தனிவீரம் செய்தவனுக்கு என்றபடி. 1தான் அத்தனிமையிலே
சென்று உதவக் காணும் இவளுக்கு நினைவு. மாயச் சகடம் உதைத்த மணாளற்கு - 2வஞ்சனைபொருந்திய
சகடம்என்னுதல்; “தளர்ந்தும் முறிந்தும் சகட அசுரர் உடல் வேறாய் பிளந்து வீய” என்கிறபடியே,
சகடம் உருமாயும்படி என்னுதல். மணாளற்கு-ஸ்ரீ ஜனகராஜன் திருமகளுக்கு வில்லை முறித்தல்போலே, இந்தச்
செயலினைக் காட்டியாயிற்று இவளைத் தனக்கே உரியவளாக்கியது. பேயைப் பிணம் படப் பால் உண்
பிரானுக்கு - 3சூர்ப்பணகையைப் போலே ஒரு கேட்டினை விளைக்க உயிரோடே விடாதே,
பூதனையைப் பிணமாய் விழும்படி முலை உண்ண வல்ல மஹோபகராகனுக்கு. னுன் வாசக்குழலி - 4இயற்கையிலேயே
வாசனைபொருந்திய குழலையுடைய என் பெண்பிள்ளை. 5அவனை, “சர்வகந்தா:” என்று
சொல்லுகைக்கு அடி இத்தலையை இட்டு. 6வாசஞ்செய் பூங்குழலாள் அன்றோ. இழந்தது மாண்பே-தன்
ஆண் தன்மைக்குரிய செயல்களை எல்லாம் காட்டி, இவளுடைய பெண்தன்மையைக்கொண்டான். மாண்பு-மாட்சிமை;
பெண்தன்மை. மாண்பு என்பதற்கு, அழகு என்றும் சொல்லுவர்.
(8)
1. “தமியற்கு” என்கிறவளுடைய
மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘தான்
அத்தனிமையிலே’ என்று தொடங்கி. இங்கே, நரகாசுரயுத்தத்தில்
சத்தியபாமை உதவியது கருதல் தகும்.
2. “மாயம்” என்றும்,
“மாய” என்றும் பதத்தைப் பிரித்துக் கொண்டு,
இருவகைப்பட்ட பதங்கட்கும் பொருந்த பொருள்
அருளிச்செய்கிறார்
‘வஞ்சனை’ என்று தொடங்கி. மாயம் - வஞ்சனை. மாய - இறக்க.
3. “பிணம்பட” என்றதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘சூர்ப்பணகையை’
என்று தொடங்கி.
4. “கொங்கலர் ஏலக்குழலி”
என்பது போன்று சொல்லாமல் “வாசக் குழலி”
என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘இயற்கையிலே’
என்று தொடங்கி.
5. “வாசக்குழலி” என்றதனால்
பலித்த பொருளை ரசோக்தியாக
அருளிச்செய்கிறார் ‘அவனை’ என்று தொடங்கி. ‘இத்தலையையிட்டு’
என்றது, சிலேடை. இந்த மயிர்முடியைக்கொண்டு என்றும், இவளைக்
கொண்டு என்றும் பொருள்.
6. அவனுக்கும்
பரிமளத்தைக் கொடுப்பவள் என்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறாந் ‘வாசஞ்செய்’ என்று தொடங்கி.
இது திருவாய்மொழி,
10. 10 : 2.
|