|
கண
கண்ணன் எம்பெருமான்
என்று என்றே கண்கள் நீர் மல்கி-1இந்த பாவனையின் மிகுதியினாலே பெற்றாற்போலே
இருந்து ஆனந்தக் கண்ணீர் புறப்படுகிறபடியாகவுமாம்; இந்த அநுசந்தானத்தாலே கண்ணீர் மல்கி என்னவுமாம்.
மண்ணினுள். . . . . .புகும் ஊர்த்திருக்கோளூரே-மண்ணினுள் புகும் ஊர் திருக்கோளூரே. 2விண்ணில்
ஓர் ஊர் விசேடிக்கவேண்டும்படியாய் இராதன்றோ. அவன் சீர் வளம் மிக்கவன் ஊர்-அவனுடைய கல்யாண
குணங்களையும் தனக்குமேல் ஒன்று இல்லாததான செல்வத்தையுடையவனுடைய ஊரையும். 3“அந்த
முக்தன் எல்லாக் கல்யாணகுணங்களையும் சர்வஜ்ஞனான பரமாத்மாவோடு அநுபவிக்கிறான்” என்கிறபடியே,
அவனோடு அவன் குணங்களோடு வாசி அறப் பிராப்யமாவதைப் போன்று, அவன் விரும்பின தேசமும்
பிராப்பியத்திலே சேர்ந்ததாகக் கடவது அன்றோ. அவன் சீர் - அவனுடைய கல்யாணகுணங்கள். அவையாவன:
அவன் தன்திறத்தில் தாழநிற்கும் நிலைகள். வளம் மிக்கவன் ஊர் - 4பரமபதம்
கலவிருக்கையைப் போன்றது; உகந்த விஷயத்தைப் பெறும் இடன் அன்றோ ஊராகிறது. 5‘எனக்குச்
சீதையால் என்ன காரியம் உள்ளது’ என்பதேயன்றோ
1. இங்குச் சொல்லுகிற கண்ணீர்,
ஆனந்தக்கண்ணீர் என்று கொண்டு, பிரிந்த
நிலையில் ஆனந்தக்கண்ணீர் வருவதற்கு இல்லையே? என்ன,
அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘இந்த பாவனையின்’ என்று தொடங்கி.
‘அநுசந்தானத்தாலே கண்ணீர்
மல்கி என்னவுமாம்’ என்றது, பிரிந்த
நிலையில் நினைக்கும் நினைப்பு ஆகையாலே சோகக் கண்ணீர்
என்னலுமாம் என்றபடி.
2. “மண்ணினுள் புகும் ஊர்”
என்று விசேடிக்க வேண்டியது என்? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘விண்ணில்’ என்று தொடங்கி.
என்றது,
பரமபதமும், மற்றுமுள்ள மேலுலகங்களும் எல்லாம் அவனுக்குப்
பரதந்திரமாகையாலே விசேடிக்க
வேண்டா; இங்கு ஈர் அரசு ஆகையாலே
விசேடிக்க வேண்டிற்று என்றபடி.
3. அவன் குணங்களைப்
போன்று அவன் ஊரும் பிராப்பியமாக இருக்குமோ?
என்ன, ‘அந்த முக்தன்’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார்.
“ஸோஸ்நுதே ஸர்வாந்
காமாந் ஸஹப்ரஹ்மணா”
என்பது, சுருதிவாக்கியம்,
4. “ஊர்” என்று விசேடித்ததற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘பரமபதம்’
என்று தொடங்கி. கலவிருக்கை - ஓலக்கமிருத்தல்.
பரமபதத்தைக்
காட்டிலும் இதற்கு அதிசயம் யாது? என்ன, ‘உகந்த’ என்று தொடங்கி
அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
5. உகந்த
விஷயம் அங்கு இல்லையோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘எனக்கு’ என்று தொடங்கி.
“கிம் கார்யம் சீதயா மம”
என்பது, ஸ்ரீராமா. யுத். 41 : 4.
|