|
1த
1தாயின்
வழியைக் கொண்டே தன்மைகளை அறுதியிடலாமே அன்றோ. 2பெருமாளைக் கண்டல்லது தரிக்கமாட்டாதானாய்
வருகிற ஸ்ரீபரதாழ்வானைக் கண்டுவைத்தேயும், முக்காலமும் உணர்ந்த முனிவரும்கூட, 3“வருத்தம்
இன்றிக் காரியம் செய்கிற ஸ்ரீராம பிரானிடத்தில் கெட்ட நினைவில்லாதவனாகிச் செல்லுகிறாயோ,
இந்தப் பெரிய சேனையானது எனக்குச் சந்தேகத்தை உண்டுபண்ணும் போலிருக்கிறது” என்கிறபடியே, தாயாரை
இட்டு வழக்குப் பேசு வித்துக்கொண்டு இவரைக் காடு ஏறப்போக விட்டாயாகில், இன்னும் ‘பெருமாள்
இருக்கில் 4கீழ்வயிற்றுக் கழலையாகிறது’ என்று அங்குப்போய் நலியத் தேடுகிறாய்
அல்லை அன்றோ என்றான் அன்றோ. அவன் படிகள் காணா நிற்கச்செய்தே தாய் சம்பந்தம் கொண்டு
ஐயப்பட்டானே அன்றோ. பொருள்களின் தன்மைகளைக்கொண்டு பத்தும்பத்தாக நிமித்தங்களை அறியக்
கடவர்களாய் இருப்பர்கள் வேடர்கள்; இங்ஙனே இருக்கச்செய்தேயும், தம் எல்லையிலே இவன் வந்து
புகுந்ததற்கு மகிழ்ந்தவர்களாய் 5‘அடிச்சேரியிலே வந்து புகுவதே!’ என்பது;
‘ஆனாலும், அரசர்களாயிருப்பார் வன்னியர் பற்றிலே புகுரும்போது கேள்விகொண்டன்றோ புகுருவது’
என்றாற்
1. இவன் வயிற்றிற் பிறப்பாலே
அவ்வூரிலே போயினமை நிச்சயிக்கும்படி
எங்ஙனே? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘தாயின் வழியை’
என்று தொடங்கி.
2. அங்ஙனம் தாயின் வழிகொண்டு
அறுதியிட்டபேர் உளரோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘பெருமாளை’ என்று தொடங்கி.
3. “கச்சிந் ந துஷ்டோ
வ்ரஜஸி ராமஸ்ய அக்லிஷ்ட கர்மண:
இயம் தே மஹதீ ஸேநா
ஸங்காம் ஜநயதீவ மே”
என்பது, ஸ்ரீராமா. அயோத். 85 :
7. இது, ஸ்ரீ பரதாழ்வானைப் பார்த்து
ஸ்ரீகுகப்பெருமாள் கூறியது. இது, குகப்பெருமாளுடைய வார்த்தையாக
இருப்பினும், இதனை இங்கே எடுத்தது, பரத்துவாச பகவானுக்கும் கருத்து
இதுவாகையாலே.
4. கீழ்வயிற்றுக் கழலை -
அடிவயிற்றில் தோன்றிய கட்டி. அக்கட்டியைப்
போன்று பாதகமாம் என்பது கருத்து. ‘கீழ்வயிற்றுக்
கழலை’ என்று
தொடங்கும் வாக்கியம்.
“கச்சிந் ந தஸ்ய அபாபஸ்ய
பாபம் கந்தும் இஹேச்சஸி
அகண்டகம் போக்துமநா
ராஜ்யம் தஸ்யா நுஜஸ்ய ச”
என்பது (ஸ்ரீராமா. அயோத். 90 :
13,) போன்ற பரத்துவாச முனிவருடைய
வார்த்தைகளைத் திருவுள்ளம்பற்றி.
5. அடிச்சேரி-அடியாருடைய
குப்பம். வெளிறு-சாரம் இல்லாதது. காழ்ப்பு -
சாரம். என்றது, வினயமும் ஆண்மையும் தோன்றச்
சொல்லி
|