பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
295

1அன

1அன்றிக்கே, கற்புவான் இடறி என்பதற்கு, வலிய அறிவினை இடனி என்றும் சொல்லுவர்கள். அப்போது, கற்பு என்று கல்வியாய், அதனாலே அறிவினைச்சொல்லி, வான் என்று வலியைச் சொல்லிற்றாகிறது. அன்றிக்கே, பெரிய ஞானத்தை இடறி என்றும் சொல்லுவர்கள். அப்போது, கற்பு என்று கல்வியாய், அதனாலே ஞானமாய், வான் என்று பெருமையாய், பெரிய ஞானத்தை என்றபடி. 2ஆசைக்கு ஓர் அளவு உண்டாகில் அன்றோ ஓர் அளவிலே தடை நிற்பது. 3”காவலும் கடந்து” என்னக் கடவதன்றோ. “யயௌச காசித் ப்ரேமாந்தா - ஒருத்தி புறப்பட்டுப் போனாள்; இவளைக் கொண்டு போனார் யார்? என்னில், அன்பினாலே வந்த இருட்சி வழிகாட்டப் போனாள்.” 4“குரவ: கிங்கரிஷ்யந்தி தகதாநாம் விரகாக்நிநா - குருக்கள் கண்டீர் என்ன, வெந்து விழுவதற்கு ஒரு குடநீர் சொரியவல்லர்களோ?”

    சேரும் நல்வளம் சேர்பழனம் திருக்கோளூர்க்கே போரும் கொல்-5இங்கே அசலைக் காக்க இருக்கிறவள் அங்கே தன் வயிறு வளர்க்கப் போவதே! இங்கே பிறர் திருந்தும்படி இருக்கிற இவள் அங்கே திருந்தின இடம் தேடிப் போவதே! தன்னைக் கண்டு பிறர் வாழ இருக்கிற இவள், தான் அவனைக்கண்டு வரழப்போவதே! ஒத்தவையான நல்ல செல்வங்கள் சேர்ந்திரும்பதாய், நீர் நிலங்களையுமுடைத்தாயிருக்கிற திருக்கோளூ ராதலின் ‘சேரும் நல்வளம்சேர்’ என்கிறாள்.

 

1. “கற்பு” என்பதற்கு, மரியாதை என்று மேலே பொருள் அருளிச்செய்து,
  அறிவு என்று வேறும் ஒருபொருள் அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’
  என்று தொடங்கி.

2. மரியாதையை மீறுதல் கூடுமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘ஆசைக்கு’ என்று தொடங்கி.

3. மரியாதையைக் கடந்து சென்றதற்குச் சம்வாதம் இரண்டு காட்டுகிறார்
  “காவலும் கடந்து” என்றும், ‘யயௌ’ என்று தொடங்கியும். “காவலும்
  கடந்து” என்பது, பெரியாழ்வார் திருமொழி. 3. 6 : 1.

  “யயௌச காசித் ப்ரேமாந்தா தத்பார்ஸ்வம் அவிலம்பிதம்”

  என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 13 : 19. இச்சுலோகத்திற்குப் பொருள்
  அருளிச்செய்கிறார் ‘ஒருத்தி புறப்பட்டு’ என்று தொடங்கி.

4. காவலைக் கடந்த பிரகாரத்தைக் காட்டுகிறார் “குரவ:” என்று தொடங்கி.
  “குரவ: கிம் கரிஷ்யந்தி” என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 18 : 22.

5. “ஊரும் நாடும்” என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து, “போருங்கொல்”
  என்கிறவளுடைய மனோபாவத்தை இரண்டு வகையாக அருளிச்செய்கிறார்
  ‘இங்கே அசலை’ என்று தொடங்கி. அவற்றை விவரணம் செய்கிறார்
  ‘தன்னைக்கண்டு’ என்று தொடங்கி.