பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
309

ஆசைகளிலிருந்து விடுபட்டவனாய்ப் பிச்சை எடுத்து உண்பதற்குத் தகுந்தவனாகிறான்”, “மனைப்பால், பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பம் எல்லாம், துறந்தார் தொழுதார் அத்தோள்” என்னுமாறு போலே. மேவி நைந்து நைந்து விளையாடல் உறாள் - 1இளமை மாறி முதியோளானாள் அல்லள். ‘ஜம்புல இன்பங்கள் தாழ்ந்தவை’ என்று சாஸ்திரத்தாலே அறிந்து அவற்றை விட்டு, ‘பகவத் விஷயம் நன்று’ என்று கைவைத்தாள் அல்லள்.

    என் சிறுத்தேவி - தன் ‘திருமால்’ என்று மேலே பெரிய தேவியைச் சொல்லுகையாலே, ‘சிறுத்தேவி’ என்று விசேடிக்கிறாள். அன்றிக்கே, பருவம் நிரம்பாதிருக்கச் செய்தேயும் பட்டம் கட்டின பெருந்தேவிகளோடு ஒக்கச் சொல்லலாயிருக்கையாலே ‘சிறுத்தேவி’ என்கிறாள் என்னுதல், 2‘என்பெண் பிள்ளை’ என்கிற நினைவு இல்லைகாணும் இவளுக்கு. “பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே” - இவளுக்கு நல் வார்த்தை சொன்ன நாக்கினைக் கழுவ வேணும் என்கிறாள். இனிப் போய் - 3வேறே சில பொருள்கள் கொண்டு போது போக்கவேண்டும் பருவத்திலே, அவற்றை விடும் படியான பாகம் பிறந்த இதற்குமேலே ஓர் ஏற்றஃகம் உண்டாகப் போனாளோ? என்றது, 4இங்கே இருக்கச்செய்தே “ஜனங்களின் சமீபத்தில் இருக்கிற இந்தச் சரீரத்தை நினைக்கிறான் இல்லை”

 

1. உலகத்துப் பெண்களினின்றும் வேறுபடுத்துகிறார் ‘இளமை மாறி’ என்று
  தொடங்கி. சுவாபதேசப்பொருள் அருளிச்செய்கிறார் ‘ஐம்புல இன்பங்கள்’
  என்று தொடங்கி. இதனால், இதர முமுக்ஷுக்களில் வேறுபட்டவர் என்றபடி.

2. தன்வயிற்றிவ் பிறந்தவளைப் ‘பெண்’ என்று கூறாமல், “தேவி” என்கிறது
  என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘என் பெண் பிள்ளை’
  என்று தொடங்கி. இப்படி நினைத்த பேர் உளரோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘பிள்ளையை’ என்று தொடங்கி. இது, பெரிய திருமொழி.
  8. 2 : 9. இதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘இவளுக்கு’ என்று தொடங்கி.

3. “இனி” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘வேறே சில’ என்று
  தொடங்கி. ஏற்றஃகம் - ஏறினவிலை. என்றது, அதிசயமாக என்றபடி.

4. இதனைத் திருஷ்டாந்தத்தோடு விவரிக்கிறார் ‘இங்கே இருக்கச் செய்தே’
  என்று தொடங்கி. “நோபஜநம் ஸ்மரந் இதம் சரீரம்” என்பது, சாந்தோக்யம்.
  8. 12 : 3. என்றது, சம்சாரத்தை விட்டுப் பரமபதத்துக்குச் சென்ற
  முக்தனுக்குப் பிறந்த ஞானம், இவளுக்கு இங்கே இருக்கச்செய்தே
  பிறந்ததானால், இனி அங்கே சென்று அநுபவிப்பது ஒன்று உண்டோ?
  என்றபடி.