பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
313

திருப்பாசுரத்தில்; இங்ஙனே உகக்கும் என்கிறாள் இத் திருப்பாசுரத்தில் என்னுதல். 1மகள் காணப்புகுகிற விஷயத்தை நினைப்பது, தன்மகள் தன்மையை நினைப்பதாய்த் திருத்தாயார் படுகிறபாடு என்தான்!

    இன்று எனக்கு உதவாது அகன்ற - 2பிள்ளை பெற்று வளர்க்கிறது ஆபத்துக்கு உதவுகைக்கு அன்றோ? தன்னைப் பிரிந்த இத்தன்மைக்கும், இந் நிலைக்கும் மேற்பட எனக்கு ஓர் ஆபத்து உண்டோ? இன்று எனக்கு உதவாது ஒழிவதே! 3“இந்த நிலையை அடைந்த நான் இக்ஷ்வாகுவம்சத்தில் பிறந்த ஸ்ரீராமபிரானை இங்குக் காண்கிறேன் இல்லை; இதைக் காட்டிலும் துக்கத்தைக் கொடுக்கக்கூடிய விஷயம் வேறு யாது?” என்றது, நான் நெடுங்காலம் கூடிவருந்தித் தம்மைப் பெற்றது, தம்மைப் பிரிந்து நான் இந்த நிலையை அடைந்த இற்றைக்கு அன்றோ? இன்று தம்மை நான் காணாது ஒழிவதே என்றான் அன்றோ என்றபடி. எனக்கு உதவாது - சக்கரவத்த்தியில் தனக்கு உன்டான வாசி : 4“நின்று தூங்குகின்றேன்” என்னுமாறு

 

1. தாயாருடைய தன்மைகளை நினைத்து வியாக்யாதா ஈடுபடுகிறார் ‘மகள்
  காணப்புகுகிற’ என்று தொடங்கி.

2. “இன்று எனக்கு உதவாது அகன்ற” என்கிறவளுடைய மனோ பாவத்தை
  அருளிச்செய்கிறார் ‘பிள்ளைபெற்று’ என்று தொடங்கி. ஆபத்தினை
  அருளிச்செய்கிறார் ‘தன்னைப் பிரிந்த’ என்று தொடங்கி.

3. ‘தன்னைப் பிரிந்த இத் தனிமைக்கும், இந்த நிலைக்கும் உதவவன்றோ
  தன்னைப்பெற்றது’ என்கை பொருந்துவதாகுமோ? என்ன, கலக்கம்
  அப்படிச் சொல்லுவிக்கும் என்பதற்குச் சம்வாதம் காட்டுகிறார்
  ‘இந்நிலையை’ என்று தொடங்கி.

  “அதோ நு கிம் துக்கதரம் ஸ: அஹம் இக்ஷ்வாகுநந்தனம்
   இமாம் அவஸ்தாம் ஆபந்ந. நேஹ பஸ்யாமி ராகவம்”

  என்பது, ஸ்ரீராமா. அயோத். 59 : 26. இது, தசரதன் புலம்பல்.

4. சக்கரவர்த்தியைக் காட்டிலும் இவளுக்கு வேறுபாடு, பிரிந்தவுடனே அவன்
  முடிந்தான்; இவள் முடியவும் பெறாதே தரிக்கவும் பெறாதே இருத்தல்.
  இதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘நின்று தூங்குகின்றேன்’ என்று
  தொடங்கி. என்றது, கொன்றைமாலையாகையாலே அழகர்க்கும் ஆகாது;
  அதுதான் திருமலையிலுள்ளதாகையாலே சைவரையும் பறிக்க ஒட்டார்கள்;
  ஆக, இரண்டு இடத்துக்கும் ஆகாமல் நாலுமாறுபோலே, நானும்,
  தம்முடைய சம்பந்தமே காரணமாகப் பந்துக்களும் ஆகாமல், தாமும்
  அங்கீகரிக்கப் பெறாமல் நடுவே நின்று தடுமாறா நின்றேன் என்ற
  சூடிக்கொடுத்த சுடர்க்கொடியைப் போன்று, இவளும் தன்னோடேகூட
  இருக்கவும் பெறாமல் முடியவும் பெறாமல் நோவுபடுகிறேன் என்கிறாள்
  என்றபடி. மேலே காட்டிய திருப்பாசுரம், நாய்ச்சியார் திரு. 9 : 9.