|
வழ
வழிப்போக்கோடு, ஊரில்
புகுதியோடு, அவன்தன்னைக் காணுமதனோடு, அங்குப் புக்கால் எப்பொழுதும் தரிசனம் செய்யத்தக்கவனோடு
வாசிஅற எல்லாம் உத்தேசியமாய் இருக்குமன்றோ. 1அர்ச்சிராதி கதியோடு, பரமபதத்தோடு,
அங்குப் புக்கால் எப்பொழுதும் தரிசனம் செய்யத்தக்கவனோடு வாசியற பேற்றிலே சேர்ந்தனவாகக்
கடவனவன்றோ.
தன் திருமால் -
2“உலகங்களில் இருக்கிற எல்லாப் பிராணிகளுக்கும் திருமாலானவர் தந்தையும் தாயுமாக
இருக்கிறார்”என்கிறபடியே, இங்கு விட்ட உறவெல்லாம் அங்கே உண்டாயிருக்கிறபடி. 3அவனுடைய
பிராப்பிய வேஷந்தான் இலக்ஷ்மீபதியாயன்றோ இருப்பது. 4விசிஷ்ட வேஷத்தில் அல்லது
தன் எண்ணத்தைச் செலுத்த அறியாள். திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு - 5‘இவள்
முற்படும்படி நாம் பிற்பாடர் ஆவதே!’ என்று பொறைகொள்ளுகைக்குக் குளிர நோக்குகிற நோக்கும்,
சில சொல்லப் புக்குத் தடுமாறுகிற திருப்பவளமும் இருக்கிறபடி. அவனுடைய கோவைவாய் துடிப்ப மழைக்கண்கள்
இருக்கிறபடி. நின்று நின்று நையும் - நாட்செல்ல நாட்செல்ல இற்று இற்று விழும். 6கண்டால்
முன்புத்தைப் பிரிவினை நினைக்க அறியாள் : எதிர்த்தலை படுகிறது கண்டு ஈடுபடுகிறபடி.
“காணுங்கால் காணேன் தவறான காணாக்கால், காணேன்
1. வழியே தொடங்கி உத்தேசியமாகக்
கூடுமோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘அர்ச்சிராதி கதியோடு’ என்று தொடங்கி.
2. “திருமால்” என்று பிராட்டியாரையும்
சேர்த்துக் கூறியதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘உலகங்களில்’ என்று தொடங்கி.
ஸர்வேஷாமேவ லோகநாம்
பிதா மாதாச மாதவ:
கச்சத்வமேநம் ஸரணம்
ஸரண்யம் புருஷர்ஷபா:
என்பது, பாரதம்.
3. “அகன்ற” என்ற பதத்தோடே
கூட்டி, பாவம் அருளிச்செய்தார் மேல்.
இங்கு, “கண்டு” என்ற பதத்தைக் கடாக்ஷித்து, பாவம்
அருளிச்செய்கிறார்
‘அவனுடைய’ என்று தொடங்கி.
4. அவனே பிராப்பியன் ஆனால்
ஆகாதோ? ‘லக்ஷ்மீபதியாய்’ என்கிற
நிர்ப்பந்தம் எதற்கு? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘விசிஷ்ட
வேஷத்தில்’ என்று தொடங்கி. விசிஷ்டம் - கூடியது.
5. திருக்கண்ணும் செவ்வாயும்
கண்டால் உருக் குலைய வேண்டுமோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இவள் முற்படும்படி’
என்று தொடங்கி.
இதனால், இவளிடத்தில் அவனுக்குண்டான வியாமோகத்தின் மிகுதி
தோற்றுகிறது
என்கிறார் ‘அவனுடைய’ என்று தொடங்கி.
6. விட்டுப்
பிரிந்து சென்றவனைக் கண்டால் வெறுப்பு உண்டாகுமே தவிர,
ஈடுபாடு உண்டாகுமோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார்
‘கண்டால்’ என்று தொடங்கி. “காணுங்கால்” என்பது, திருக்குறள்.
|