|
New Page 1
பெருமையுடைய பிரானாரே
அன்றோ. எம்மை நீத்த எம்காரிகை - 1அவளுக்கு இங்குள்ள எனது என்னும் செருக்குக்
கழியக் கழிய, அதுதானே காரணமாகாநின்றது திருத்தாயார்க்குப் பற்றுகைக்கு. 2பகவத்
விஷயத்திலே இறங்கி மூழ்குதலும், வேறுபட்ட பொருள்களை விடுகைக்கு எல்லை இவ்வளவாகையும், இப்படி
விட்டால் பின்பு அவர்கள் தாங்களே உத்தேசியர் என்னும் இடமும் சொல்லுகிறது. 3புறம்பே
உள்ளவற்றை விடப் பண்ணுவித்துக்கொண்ட விஷயத்தில் ஞானலாபமேயன்றோ இவளுக்கு வேண்டுவது. இவள்
சம்பந்தமே அன்றோ திருத்தாயார்க்கு வேண்டுவது. 4கசிந்த நெஞ்சினளாய் எம்மை
நீத்த எம் காரிகை திருக்கோளூர்க்கே கசிந்த நெஞ்சினளாய்க் கண்ணநீர் துளும்பச் செல்லும்கொல்
- 5இவள் என்னை விடும்படி செய்துகொண்ட விஷயத்தில் ஈடுபாடானது அவ்வூரில் புகுதலையும்
செய்து கொடுக்கவற்றோ? 6‘எம்மை நீத்த’ என்று நிச்சயித்தாள்; ‘செல்லும்
கொல்’ என்று ஐயப்படா நின்றாள்; இதற்குக் காரணம் என்? என்னில், பிரேமம் இரண்
1. அவள், இவளை நீக்காநிற்க,
இவள் “எம்காரிகை” என்னக் கூடுமோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அவளுக்கு’ என்று தொடங்கி.
2. “எம்மை நீத்த எம்காரிகை”
என்பதற்குச் சுவாபதேசப் பொருள்
அருளிச்செய்கிறார் ‘பகவத் விஷயத்திலே’ என்று தொடங்கி.
உத்தேசியர்
- விடப்பட்டவர்களுக்கு உத்தேசியர்.
3. ‘விடப்பட்டவர்களுக்கு
விட்டவர்கள் உத்தேசியர்’ என்னாநின்றீர்;
அவர்களுக்கு, பகவத் ஞானலாபம் வேண்டாவோ? என்ன,
அது மகளுக்கே;
தாயாருக்கு அவள் சம்பந்தமே வேண்டுவது என்கிறார் ‘புறம்பே
உள்ளவற்றை’ என்று தொடங்கி.
4. “கசிந்த நெஞ்சினளாய்”
என்று, இரண்டு முறை வந்திருப்பதற்குப்
பிரயோஜனங் காட்டுலதற்குத் திருவுள்ளம்பற்றி அந்வயம்
காட்டுகிறார்
‘கசிந்த நெஞ்சினளாய்’ என்று தொடங்கி.
5. இந்த அந்வயத்தால், தாயாரை
விட்டுச் சென்றதற்கு ஒரு கசிவும்,
திருக்கோளூரில் செல்வதற்கு ஒரு கசிவும் என்று, பிரயோஜனம்
அருளிச்செய்கிறார் ‘இவள் என்னை’ என்று தொடங்கி.
6. நீத்தலை
நிச்சயித்து, புகுதலை ஐயப்படுகிறதற்குப் பரிஹாரம்
அருளிச்செய்யத் திருவுள்ளம்பற்றி, அது தன்னை
அநுபாஷிக்கிறார்
‘எம்மை நீத்த’ என்று தொடங்கி. ‘பிரேமம்’ என்று தொடங்கி அதற்குப்
பரிஹாரத்தை
அருளிச்செய்கிறார்.
|