பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
365

New Page 1

வேணும். கிளிகாள் விரைந்து ஓடி வந்து - 1அறிவித்துக் கூட வர இராதே கொள்ளுங்கோள். 2திருவடி பிராட்டியைத் தேடிப் போகிற போது மஹாராஜரோடே செய்த காலவரையறையை இக் கரையிலே கழித்துப் பின்பு இலங்கையிலே போய்ப் புக்கு எங்கும் தேடி, அவளைக் கண்டு, பின்னர் ‘இக் காட்சியால் பிரயோஜனம் உள்ளது அவ் வுடம்பு உள்ளபோதே சென்று அறிவிக்கில் அன்றோ’ என்று ஒரு நாளே வந்தான் அன்றோ. அதற்குக் காரணம், போகிறபோது இவர் ஆற்றாமையைக் காண்கையாலே, ‘நாம் வருமளவும் இவர் உயிர் தரித்திருத்தல் அரிது’ என்று இருந்தான்; பெருமாள் தாமும், ‘பிள்ளாய்! நீ இருக்கிறபோதைத் தரிப்புக்கொண்டு நீ போனாலும் இப்படி இருப்பன் என்று இராதேகாண்; என் அளவு அறிந்து காரியம் செய்’ என்றார் அன்றோ. அன்றிக்கே, விரைந்து ஓடி வந்து என்பதற்கு, நீங்கள் முற்பட வந்த பிரீதி பொறுத்தால், பின்பு அவன் வரவாகவேணும் என்னுதல். அன்றிக்கே, அவனுடனே கூட வரில் 3வாய்புகுநீராய் உங்களைக் கொண்டாட ஒண்ணாது; ஆன பின்பு நான் முறைகெடாமல் அநுபவிக்கும்படி வாருங்கோள் என்னுதல். 4உபகாரகரான உங்கள்காலிலே முற்பட விழுந்தபின்பு அவன் காலிலே விழும்படி பண்ணுங்கோள். ஆகையால் அன்றோ, நம்முதலிகள் குருபரம்பை முன்னாகத் துவயத்தை அநுசந்தானம் செய்கிறது.

 

1. விரைந்து ஓடி வருவான் என்? அவனோடே கூட வந்தாலோ? என்ன,
  கூடவரின், ‘அதற்கு முன்னே இவள் சத்தை அழியும்’ என்னுமதனைக்
  கூறத் திருவுள்ளம்பற்றித் தொடங்குகிறார் ‘அறிவித்துக் கூடவர இராதே
  கொள்ளுங்கோள்’ என்று.

2. நீங்கள் அவனோடே வந்தால் வருவதற்குள் என் சத்தை அழியும்;
  ஆனபின்பு, நான் தரித்திருப்பதற்காக விரைவில் வாருங்கோள்
  என்றதனைத் திருவுள்ளம்பற்றி அதற்குத் திருஷ்டாந்தம் காட்டுகிறார்
  ‘திருவடி, பிராட்டியை’ என்று தொடங்கி.

3. வாய்புகுநீர் - உந்மஸ்தக அநுபவம்.

4. ‘முறைகெடாமல்’ என்கைக்கு, முறை யாது? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘உபகாரகரான’ என்று தொடங்கி.

5. “விரைந்து ஓடி வந்து” என்றதற்கு அருளிச்செய்த மூன்று வகையான
  பொருள்களில், மூன்றாவது பொருளுக்கு இரண்டுவகையாகச் சுவாபதேசப்
  பொருள் அருளிச்செய்கிறார் ‘ஆகையால் அன்றோ’ என்று தொடங்கியும்,
  ‘இனித்தான்’ என்று தொடங்கியும். குருபரம்பரை முன்னாகச்
  சர்வேசுவரனைச் சேவிக்க வேண்டுகையாலே முன்னே வரச் சொல்லுகிறாள்
  என்பது முதல் கருத்து. பகவானை அடைந்தபின்னர் ஆசாரியனுக்கு
  அடிமைசெய்ய முடியாமையாலே, உங்களுக்கு நான் அடிமை செய்யும்படி
  முன்னே வரவேண்டும் என்பது இரண்டாவது கருத்து.