|
எனக
எனக்கு ஆக்கினவன்.
1‘யாவையும் யாவருமாய் நின்ற மாயன்’ என்று உலகமே உருவமாய்க்கொண்டு நின்ற நிலையைச்
சொல்லி வைத்து, ‘என் ஆழிப்பிரான்’ என்கிறார் அன்றோ, அசாதாரணமான வடிவுக்குத் தாம் ஈடுபட்டபடி.
2“நிராய் நிலனாய்” என்று வைத்து, “கூராராழி வெண்சங்கேந்திக் கொடியேன்பால்
வாராய்” என்றாரே அன்றோ. 3அவனுக்குப் புறம்பாய் இருப்பது ஒன்று இல்லை என்று
சொல்லுவதற்காக, ஜகச்சரீரன் என்ற அளவிலே அதனைப் போன்று இது உத்தேசியமாமோ? 4“பரஞ்சுடர்
உடம்பாய்” என்றும், “அழுக்குப் பதித்த உடம்பாய்” என்றும் ஒன்றைக் குற்றங்கட்கெல்லாம் எதிர்த்தட்டானதாகவும்,
ஒன்றைக் குற்றம் கலந்ததாகவும் சொல்லிற்று அன்றோ.
மாவை வல்வாய்
பிளந்த மதுசூதற்கு. 5இவ் வடிவழகை அநுபவிப்பிக்கைக்கு விரோதிகளை அழியச்செய்தலானது
இவனுக்கு எப்பொழுதும் உள்ளது ஒன்று கண்டீர். புழுக்குறித்தது எழுத்தாமாறுபோல் அன்றிக்கே, விரோதிகளை
அழித்தல் நித்தியமாயிருத்தலின் ‘மதுசூதற்கு’ என்கிறது. என்மாற்றம் சொல்லி-‘கன்மின்கள்’
என்று உங்களுக்குச் சொன்னதைச் சொல்லி. பாவைகள் தீர்க்கிற்றிரே - 6பரமசேதநன்பொகட்டுப்
போனான், சிறிது அறிவையுடைய இவை போகிறன இல்லை; இனி, நீங்கள் என் துக்கத்தைப்
1. எனக்கு ஆக்கினவன் என்கைக்கு,
இவள் அதிலே ஈடுபட்டவளாய்
இருப்பாளோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘யாவையும்’
என்று
தொடங்கி.
2. உலகமே உருவமாயிருக்கும்
தன்மையைக் காட்டிலும், அசாதாரண
விக்கிரஹம் அநுபவிக்கத் தகுந்தது என்கைக்குப் பிரமாணம் காட்டுகிறார்
‘நீராய்’ என்று தொடங்கி.
3. அசாதாரண விக்கிரஹத்தைப்
போன்று உலகமே உருவமாயிருக்கும்
தன்மை உத்தேசியம் இன்றோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘அவனுக்குப் புறம்பாய்’ என்று தொடங்கி.
4. ‘பரஞ்சுடர் உடம்பாய்’
என்பது, திருவாய். 6. 3 : 7.
5. விரோதிகளை அழித்த
தன்மையைச் சொல்லுவதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘இவ்வடிவழகை’ என்று தொடங்கி. “மதுசூதன்”
என்று
உடம்படு புணர்த்திச் சொன்னதன் பாவத்தை அருளிச்செய்கிறார்
‘புழுக்குறித்தது’ என்று தொடங்கி.
6. சர்வேசுவரன்
இருக்க, பறவைகள் இருக்க, பாவையைப்
பார்த்துச்சொல்லுவான் என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘பரமசேதநன்’ என்று தொடங்கி.
|