பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
405

தன

தன்மையைக் காட்டினோமே” என்று அவன் திருவுள்ளமாக; அதில் குறை என்? நீ உலகமே உருவமாய்க் கொண்டிருக்கிற இந்த ஞானம் எனக்கு இல்லையோ? இந்த ஞானந்தானே அன்றோ “அசாதாரண ஆகாரத்தையும் காணவேணும்” என்னப் பண்ணுகிறது; ஆதலால், எனக்குப் பேறானது கிடக்க, அல்லாதனவற்றைக் காட்டினால் பிரயோஜனம் இல்லை என்கிறார். 1அதுவும் உன் ஐசுவரியத்திற்குப் புறம்பு அல்லாமையாலே வேணுமாகில் அறிதல் செய்கிறேன்; அதனால் வந்தது உன்னதானவற்றை ‘என்னது’ என்று இருக்கிற மயக்கம் நீங்குகிறது. 2அருச்சுனனும் ஸ்ரீ விசுவரூபம் கண்ட உடனே “உம்மைக் கிரீடத்தையுடையவராயும் பார்ப்பதற்கு நான் விரும்புகிறேன்; பல கைகளையுடையவரே, விசுவரூபத்தையுடையவரே, நான்கு கைகளுடன் கூடின அந்த உருவமாக ஆகக்கடவீர்” என்கிறபடியே, அசாதாரணமான வடிவை எனக்குக் காட்டவேணும் என்றான் அன்றோ. 3என்னுடைய துயர ஒலியைக் கேட்டு இரங்கி வந்திலையாகிலும், உன்னுடைய விபூதி அழியாமல் நோக்கவேணுமாகில் வா என்கிறார் என்றுமாம். 4இவருடைய துயர ஒலிதான் அவனுக்கு உபய விபூதியிலும் குடி இருப்பு அரிதாய்க்காணும் இருக்கிறது.

 

1. ஆனால், ஜகதாகாரதை உத்தேசியம் அன்றோ? என்ன, ‘அதுவும்’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

2. ‘இந்த ஞானம்தானே அன்றோ அசாதாரண ஆகாரத்தையும் காணவேணும்
  என்னப் பண்ணுகிறது’ என்று மேலே அருளிச்செய்ததற்குத் திருஷ்டாந்தம்
  காட்டுகிறார் ‘அருச்சுனனும்’ என்று தொடங்கி.

  “கிரீடினம் கதினம் சக்ரஹஸ்தம் இச்சாமி த்வாம் த்ருஷ்டும் அஹம்ததைவ
   தேநைவ ரூபேண சதுர்புஜேந ஸஹஸ்ரபாஹோ பவ விஸ்வமூர்த்தே”

  என்பது, ஸ்ரீ கீதை, 11 : 46.

3. “கொடியேன்பால் வாராய்” என்னுமளவும் கடாக்ஷித்துச் சங்கதி
  அருளிச்செய்தார் இதுகாறும். இனி, “மண்ணும் விண்ணும் மகிழ”
  என்றதனைக் கடாக்ஷித்து வேறும் ஒரு சங்கதி அருளிச்செய்கிறார்
  ‘என்னுடைய துயர ஒலியை’ என்று தொடங்கி.

4. அவன் வாராவிட்டால் அழியுமோ? என்ன, ‘இவருடைய’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார்.