பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
407

பரந

பரந்துளன்” என்றாரே யன்றோ மேல். 1“அந்தப் பரமாத்மா முதலில் தண்ணீரையே படைத்தார்” என்கிறபடியே, முதல் முதல் தண்ணீரைப் படைத்துப் பின்னர் மண் முதலான பூதங்களை உண்டாக்கி, 2இவற்றைக்கொண்டு காரியம் கொள்ளுமிடத்தில் ஒன்றில் ஒன்று அதிகமாக வேண்டி இருக்குமன்றோ; 3“ஐம்பெரும் பூதங்களும் ஒன்றில் ஒன்று கலத்தல் பெற்றன; ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் பெற்றுள்ளன” என்றே அன்றோ படைக்கும் முறைதான் இருப்பது;

 

  “நின், தோற்றமும் அகலமும் நீரினுள”

(4. 30.)

  என்ற பரிபாடற் பகுதியும், ‘நாராயணன் என்னும் திருநாமம் நீரின்கட்
  காணப்படுதலாகிய இக்காரணம்பற்றி வந்தது’ என்னும் பரிமேலழகர்
  உரையும் இங்குக் காணத்தகும்.

1. ஐம்பெரும் பூதங்களையும் சொல்லுகிறவர், முதலில் தண்ணீரைச்
  சொல்லுவதற்குப் பிரமாணத்தைக் காட்டுகிறார் ‘அந்தப் பரமாத்மா’
  என்று தொடங்கி.

  “அபஏவ ஸஸர்ஜாதௌ தாஸு வீர்யம் அபாஸ்ருஜத்”

  என்பது, மனுஸ்மிருதி. 1 : 8.

2. ஐம்பெரும் பூதங்களைச் சொன்னது, அவற்றின் காரியமான அண்ட
  சிருஷ்டிக்கும் உபலக்ஷணம் என்று கொண்டு, பஞ்சீகரணத்தால் அல்லது
  அண்ட சிருஷ்டி கூடாமையாலே பஞ்சீகரணத்தைக் காட்டுகிறார்
  ‘இவற்றைக்கொண்டு’ என்று தொடங்கி.

  நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும்
  கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
  இருதிணை யைம்பால் இயல்நெறி வழாமைத்
  திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்.

  என்பது, தொல்காப்பியம் மரபியல், 31.

      காரியம் கொள்ளுமிடத்தில் - அண்டரூபமான காரியத்தைச்
  செய்யுமிடத்தில். ‘ஒன்றில் ஒன்று அதிகமாக வேண்டியிருக்குமன்றோ’
  என்றது, பிரிக்கப்படுகின்ற ஒருபாதியைக் காட்டிலும், பிரிக்கப்படாத
  ஒருபாதி பிரதானமாக வேண்டியிருக்கும் என்றபடி.

3. ‘ஒன்றில் ஒன்று அதிகமாக’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
  ‘ஐம்பெரும் பூதங்களும்’ என்று தொடங்கி.

  “ஸமேத்ய அந்யோந்ய ஸம்யோகம் பரஸ்பர ஸமாஸ்ரய:”

  என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1. 2 : 54.

 
    இந்தச் சுலோகத்தில் “பரஸ்பர ஸமாஸ்ரய:” என்றதனால், ஆஸ்ரய
  ஆஸ்ரயி பாவத்தாலும், ஆதார ஆதேய பாவத்தாலும் ஒன்றில் ஒன்று
  அதிகமாக இருக்கவேண்டும் என்பது போதரும்.