பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
413

    மாய அம்மானே - 1திருமகள் கேள்வனானவன் இரப்பவனானபடியும், வடிவழகைக் காட்டி வாய்மாளப் பண்ணினபடியும், “கொள்வன் நான் மாவலி” என்றாற் போலே சில மழலைச் சொற்களைப் பேசினபடியும், சிறுகாலைக் காட்டிப் பெரிய காலாலே அளந்த படியும் தொடக்கமான ஆச்சரியங்களைச் சொல்லுகிறது. 2“தேவர்களுக்கும் தானவர்களுக்கும் பொதுவான தெய்வம்” என்கிற ஸ்வாமித்வமன்றோ அங்ஙன் செய்யவேண்டிற்று என்பார் ‘அம்மானே’ என்கிறார். நான் உனை நண்ணி உகந்து கூத்தாட இந்திரன் 3முதலானோர்களைப் போன்று எனக்கு இராஜ்ய அபேக்ஷை இல்லை காண்; நீ செய்து தந்த ஞானத்தாலே நிறைவு பெற்றவன் ஆகிறிலேன். நான் உன்னைக் கிட்டிக் கண்டு உகந்து கூத்தாடும்படி வரவேணும். வருகைக்கு உண்டான வியாபாரம் அவன் தலையது; வந்தால் உகக்கைதான் இவரது செயல். நான் கண்டு உகந்து கூத்தாட - 4மஹாபலியைப்போலே ஒன்று கொடுக்க இருக்கிறேன் அல்லேன்; இந்திரனைப்போலே ஒன்று கொள்ள இருக்கிறேன் அல்லேன்; ‘எனக்கு’ என்று இருப்பாரோடும், ‘என்னது’ என்று இருப்பாரோடுமோ நீ கொடுத்துக்கொண்டு பரிமாறுவது? உன்னையே கண்டு உகப்பார்க்கு உன்னைக் காட்டலாகாதோ? 5“கிருஷ்ணா!

 

1. “மாயன்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘திருமகள்
  கேள்வனானவன்’ என்று தொடங்கி.

2. “தேவாநாம் தானவாநாஞ் ச ஸாமாந்யம் அதிதைவதம்”

  என்பது, ஜிதந்தா. ‘அங்ஙன் செய்ய வேண்டிற்று’ என்றது, வலங்காட்டி
  வாங்கவேண்டிற்று என்றபடி.

3. ‘முதலானோர்கள்’ என்றதனால் மஹாபலியைக் கொள்க. ‘இராஜ்ய
  அபேக்ஷை இல்லைகாண்’ எனின், விருப்பம் வேறு யாதினிலோ? எனின்,
  உகந்து கூத்தாடுகையிலே விருப்பம் என்க. “கண்டு” என்றதற்கு, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘நீ செய்து தந்த’ என்று தொடங்கி. “உகந்து”
  என்பதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘வருகைக்கு’ என்று தொடங்கி.
  என்றது, நீ வருகைக்கு ஒரு சாதனத்தைச் செய்கிறவன் அல்லேன், நீ
  வந்தால் கண்டு மகிழ்வதுதான் நான் செய்யும் காரியம் என்றபடி.

4. “நான்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘மஹாபலியைப் போலே’
  என்று தொடங்கி.

5. அப்படி உகப்பாரோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘கிருஷ்ணா!’ என்று தொடங்கி.

  “ஸம்ப்ரமை: துஷ்ய கோவிக்த ஏதந்ந: பரமம் தநம்
   அந்யதா வா விசேஷேண க: த்வாம் அர்ச்சயிதும் க்ஷம:”

 
என்பது, பாரதம் உத்யோ. ஸ்ரீ கிருஷ்ணனைப் பார்த்து விதுரன் கூறியது.