|
ச
சாலப்பலநாள் -
1உன்னுடைய ரக்ஷணம் அநாதி அன்றோ? அன்றிக்கே, நூறு ஆண்டு பதினோராயிரம் ஆண்டு என்றுமாம்.
உகந்தோறும் - 2“யுகங்கள்தோறும் பிறக்கிறேன்” என்னுமாறு போலே. உயிர்கள் -
3ஒரு திருவடி, திருவனந்தாழ்வான், பிராட்டி இவர்களுக்காக அன்று கண்டீர், எல்லா ஆத்மாக்களையும்
ரக்ஷிப்பது அன்றோ உன்னது. காப்பானே - 4இவர்களுக்கு அழித்துக் கொள்ளூகை பணியானாற்போலே
அன்றோ அவனுக்கும் நோக்குகை பணியானபடி. 5நான் கைவாங்கினேன், இனிக் காவற்
சோர்வு படாமல் வேணுமாகில் நோக்கிக்கொள். 6“இராம்பிரானாலும் இலக்ஷ்மணனாலும்
காப்பாற்றப்பட்டது, சுக்கிரீவனோடு கூட்டியுள்ள அந்தச் சேனை” - கடற்கரையிலே விட்டபோது
பெருமாளை நோக்கு
1. “கல்பந்தோறும் செய்தருளும்படியைத்
திருவுள்ளம்பற்றியாதல்,
இராமகிருஷ்ணாதி அவதாரங்களிலே பலகாலம் எழுந்தருளியிருத்தலைத்
திருவுள்ளம்பற்றியாதல்
“சாலப்பலநாள்” என்கிறார் என்று இரண்டு
வகையாகக் கருத்து அருளிச்செய்கிறார் ‘உன்னுடைய’ என்று
தொடங்கியும், ‘நூறு ஆண்டு’ என்று தொடங்கியும்.
2. “பரித்ராணாய ஸாதூநாம்.
. .ஸம்பவாமி யுகேயுகே” என்பது, ஸ்ரீ கீதை,
4 : 8.
3. “உயிர்கள்” என்ற பன்மைக்குக்
கருத்து அருளிச்செய்கிறார் ‘ஒரு
திருவடி’ என்று தொடங்கி.
4. “காப்பானே” என்று நிரூபகமாகச்
சொன்னதற்குக் கருத்து
அருளிச்செய்கிறார் ‘இவர்களுக்கு’ என்று தொடங்கி.
5. “காப்பானே” என்ற
விளிக்குக் கருத்து அருளிச்செய்கிறார் ‘நான்
கைவாங்கினேன்’ என்று தொடங்கி.
6. ஒருவன், தன்னைப்
பாதுகாத்துக் கொள்ளுவதில் நின்றும் கை
வாங்குவானேயானால், அக்கணத்திலிருந்தே அவன்
பாதுகாப்பான்
என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘இராமாபிரானாலும்’ என்று
தொடங்கி.
“ராமலக்ஷ்மண குப்தா ஸா
ஸுக்ரீவேணச வாஹிநீ
பபூவ துர்தர்ஷதரா ஸர்வை:
அபி ஸுராஸுரை:”
என்பது, ஸ்ரீராமா. யுத். 25 : 33.
இந்தச்
சுலோகத்திற்கு விரிவுரை அருளிச்செய்கிறார் ‘கடற்கரையிலே’
என்று தொடங்கி. கண் சோர்ந்த
அளவிலே - தூங்கின அளவிலே.
சுலோகத்திலேயுள்ள “லக்ஷ்மண” என்ற சொல்லுக்குப் பொருள், ‘தாம்
கையும்
வில்லுமாய்க்கொண்டு’ என்பது. “ராமஸ்யதக்ஷிணோபாஹு:” என்றது,
இங்கு நினைத்தல்தகும்.
‘கண்சோர்ந்த அளவிலே உலாவினார்’
என்கையாலே, ஒருவன், தன் முயற்சியைக் கைவிடுகையே அவன்
காப்பதற்குக் காரணம் என்கிறார் ‘அவன் நோக்குகைக்கு’ என்று
தொடங்கி. கண் செம்பளித்தல்
- கண்மூடுதல்; என்றது, தன்முயற்சியைக்
கைவிடுதலைக் குறித்தபடி.
|