பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
420

New Page 1

பேறு” என்று அறிந்தபின்பும் தளருமத்தனையோ? 1‘நீ ரக்ஷகன்’ என்று அறியாதொழிதல், ‘வேறு எனக்கு ரக்ஷகமுண்டு’ என்றிருத்தல், ‘லக்ஷ்மிக்கு நாயகனாயுள்ள வஸ்து பிராப்யம்’ என்று அறியாதொழிதல், ‘எனக்கு நான் உரியேள்’ என்று இருத்தல் செய்தேனோ இழக்கைக்கு; ருசி பிறந்த பின்பு இழக்கவோ?

    2
இப் பாசுரத்தால், அகாரத்தின் பொருளை முறைப்படி வியாக்கியானம் செய்கிறார்; “அவ-ரக்ஷணே” அன்றோ தாது. ரக்ஷிக்குமிடத்தில், எல்லாவகையாலும் ரக்ஷிக்கவேண்டும்; அதுதான் எல்லாக் காலமும் ரக்ஷிக்கவேண்டும்; அப்படி ரக்ஷிக்குமிடத்தில் எல்லாரையும் ரக்ஷிக்கிறவனாகவேண்டும்; இப்படி வரையாதே ரக்ஷிக்குமிடத்தில், “குற்றம் செய்யாதார் ஒருவரும் இலர்” என்னுமவளும், “என்னடியார் அது செய்யார்” என்னுமவனும்கூட ஆயிற்று; ஆகையாலே, அகாரம், மிதுநத்துக்கு வாசகமாயிற்று. “ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும் காப்பானே” என்கையாலே, எல்லாவகையாலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று; “சாலப் பலநாள் யுகந்தோறும்” என்கையாலே, எல்லாக்காலத்திலும் ரக்ஷகத்வம் சொல்லிற்று; “உயிர்கள்” என்கையாலே, சர்வரக்ஷகத்வம் சொல்லிற்று; ‘கோலத் திருமாமகளோடு உன்னைக்கூட’ என்கையாலே, திருமகள்கேள்வனே பிராப்யம் என்றது. அகாரத்தின் விவரணமான திருமந்திரத்தின் பொருளும் சொல்லுகிறது; 3“கோலத் திருமாமகளோடு உன்னை” என்கையாலே பிரஹ்மசொரூபம் சொல்லிற்று; “அடியேன்” என்கையாலே, ஜீவாத்மசொரூபம் சொல்லிற்று; ‘உயிர்கள் காப்பான்’ என்கையாலே, உபாயம் சொல்லிற்று; ‘உன்னைக்கூட’ என்கையாலே, பலம் சொல்லிற்று, ‘உன்னைக்கூடாதே - தளர்வேனோ’ என்கையாலே விரோதி சொரூபம் சொல்லிற்று.

(3)

 

1. மேலேயுள்ள பதங்களை எல்லாம் கடாக்ஷித்து, “தளர்வேனோ”
  என்பதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘நீ ரக்ஷகன்’ என்று தொடங்கி.
  “இன்னும்” என்றதனை நோக்கி ‘ருசி பிறந்தபின்பு இழக்கவோ?’
  என்கிறார்.

2. அகாரத்தின் பொருள் இத் திருப்பாசுரம் என்கிறார் ‘இப்பாசுரத்தால்’
  என்று தொடங்கி.

3. ‘திருமந்திரத்தின் பொருளும் சொல்லுகிறது’ என்று அருளிச்செய்து,
  ‘கோலத்திருமாமகளோடு’ என்று தொடங்கி அர்த்தபஞ்சகத்தை
  (ஐம்பொருள்) அருளிச்செய்கிறார். திருமந்திரம், ஐம்பொருள்களையும்
  பற்றிச் சொல்லுகையாலே.