பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
422

கத

கத்தி முதலிய ஆயுதங்களால் வெட்டப்பட்டதாகவும் அரக்கர் சேனையைக் கண்டார்கள்” என்கிறபடியே, 1பின்பு, துகளும் காணஒண்ணாத படியாகை. சகடாசுரனைக் கொன்றான் என்று திரளச்சொல்ல அமைந்திருக்க, ‘தளர்ந்தும், முறிந்தும்’ என்று தனித்தனியே சொல்லுகிறாரன்றோ, பகைவர்களைக் கோறல் ஆகையாலே அந்த அந்த நிலைகள் தமக்கு இனியவாயிருக்கையாலே. திருக் கால் ஆண்ட - 2அடியார்களை ஆண்டால் ஆபத்துக்கு உதவுவர்கள் அன்றோ 3இவன் இளமையாலே ஒன்றும் அறியாதே கிடக்க, திருவடிகள் காண் நம்மை நோக்கிற்று என்கிறார். 4“பால் வேண்டினவனாய் அழுதான் “என்கிறபடியே, முலைவரவு தாழ்த்தவாறே அனந்தலிலே திருவடிகளை நிமிர்த்தான்; அவ்வளவிலே பொடி பட்டானித்தனை; 5“உருளச் சகடமது உறக்கில் நிமிர்த்தீர்” என்று இவனும் அறிந்துசெய்தானல்லன். 6தன்னை உணர்ந்து பரிமாறும்போது திவ்விய ஆயுதமும், அவை உதவாதபோது கையும், அதுவும் உதவாத போது திருவடிகளுமாய் இருக்கிறபடி. 7நம்முடைய ஆபத்துக்களுக்கே அன்றிக்கே, அவனுடைய ஆபத்துக்கும் திருவடிகளே காணும் உதவுவன; 8திருமேனிதான் அடியார்களுக்காக ஆகையாலே, அவர்கள் விரோதி போகைக்கும் அதுதானே உறுப்பாயிருக்கை.

 

1. “வீய” என்றதன்பொருள், ‘பின்பு’ என்று தொடங்கும் வாக்கியம்.

2. காலாலே அழித்த என்னாமல் “திருக்கால் ஆண்ட” என்பதற்கு,
  ரசோக்தியாக அருளிச்செய்கிறார் ‘அடியார்களை’ என்று தொடங்கி.

3. ஈசுவரன் அழித்திருக்க, திருவடி அழித்தது என்பது என்? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘இவன் இளமையாலே’ என்று தொடங்கி.

4. மேலே அருளிச்செய்ததற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘பால்
  வேண்டினவனாய்’ என்று தொடங்கி. “ஸ்தந்யார்த்தீ ப்ரருரோத ஹ”
  என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 6 : 1.

5. தூக்கமயக்கத்தாலே திருவடியை நிமிர்த்தியதற்குப் பிரமாணம்
  காட்டுகிறார் ‘உருளச்சகடம்’ என்று தொடங்கி. இது, பெரிய திரு.
  10. 8 : 3.

6. திவ்வியாயுதங்கள் இருக்க, திருவடிகளாலே அழித்தது என்? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘தன்னை உணர்ந்து’ என்று
  தொடங்கி.

7. திருவடிகள் உதவிசெய்தல் நமது ஆபத்துக்கு அன்றோ? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘நம்முடைய’ என்று தொடங்கி.

8. அவன் திருமேனிக்கு வந்த ஆபத்தைப் போக்கியது, அடியார்களுடைய
  விரோதியைப் போக்கியவாறு யாங்ஙனம்? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘திருமேனிதான்’ என்று தொடங்கி. என்றது, திருமேனி