பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
434

என

என்று ஒன்று உண்டோ என்கிறார். 1என்னை இங்கே வைத்தபோதே, குழியைக் கல்லி மண்ணை இட்டு அமுக்கப் பார்த்தாயன்றோ என்கிறார். 2“என்னை துவேஷிக்கிறவர்களும் கொடியவர்களும் மனிதர்களில் கெட்டவர்களுமான அவர்களை நான் பிறவிகளில் எப்பொழுதும் தள்ளுகிறேன்” என்னும்படியே.

    ஆவி திகைக்க - இந்திரியங்களுக்கு மூலமான மனம் கலங்க. ஐவர் குமைக்கும் - ‘ஐவர்’ என்று உயர்திணையாகச் சொல்லுகிறார் நலிவின் மிகுதியாலே. பல மில்லாத 3ஒருவனைப்பற்றி ஐந்துபடர் நலியுமாறுபோலே ‘என் விஷயத்தைக் காட்டு காட்டு’ என்று தனித்தனியே நலிகிறபடி. 4இப்படி நலிந்தாலும் சுவை உண்டாகில் ஆம் அன்றோ. சிற்றின்பம் - 5முள்ளிப்பூவில் தேன்போலே. அற்பசாரங்கள் அன்றோ. சிற்றின்பம் - 5முள்ளிப்பூவில் தேன்போலே. அற்பசாரங்கள் அன்றோ. என்றது, தேவரை அகற்ற வேண்டுவதுண்டாய், அநுபவிக்கலாவது ஒன்று இன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி. பாவியேனை - 6அந்த மில் பேரின்பத்துக்கு இட்டுப் பிறந்த நான் சிற்றின்பத்தில் சேரும்படியாவதே! 7“வீவில் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன்” என்றவரன்றோ இங்ஙனே சொல்லுகிறார். பல - ஒன்றிலே கால் தாழப்பண்ணவல்ல விஷயமில்லையே. நீ காட்டிப் படுப்பாயோ - ரக்ஷகனான நீ காட்டி முடிக்கப்பார்க்கிறாயோ?

 

1. “பாவியேனை” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘என்னை இங்கே’ என்று
  தொடங்கி அருளிச்செய்கிறார்.

2. சம்சாரத்தில் வைத்திருத்தல், தண்டனைக்குரிய காரியமோ? என்ன,
  ‘என்னை’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

  “தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்
   க்ஷிபாமி அஜஸ்ரமஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு”

  என்பது, ஸ்ரீ கீதை. 16 : 19.

3. தாம் ஒருவராக இருக்க, இந்திரியங்கள் ஐந்து நலிவதற்குத் திருஷ்டாந்த
  மூலமாக அவை குமைக்கும் பிரகாரத்தைக் காட்டுகிறார் ‘பலமில்லாத
  ஒருவனை’ என்று தொடங்கி.

4. “சிற்றின்பம்” என்பதற்கு, அவதாரிகை அருளிச்செய்கிறார் ‘இப்படி
  நலிந்தாலும்’ என்று தொடங்கி.

5. சுவை இல்லையோ? என்ன, ‘முள்ளிப்பூவில்’ என்று தொடங்கி அதற்கு
  விடை அருளிச்செய்கிறார். அல்பரசம் என்பதற்குப் பிரமாணம்
  காட்டுகிறார் ‘அற்பசாரங்கள்’ என்று தொடங்கி. இது, திருவாய். 3. 2 : 6.

6. “பாவியேனை” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘அந்தமில்’ என்று
  தொடங்கி.

7. அந்தமில் பேரின்பத்துக்கு இட்டுப்பிறந்த இவர் சிலநாள்
  அநுபவித்தாரோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘வீவில்
  இன்பம்’ என்று தொடங்கி. இது, திருவாய். 4. 5 : 3.