|
ஈ
ஈடு :-
பத்தாம் பாட்டு. 1‘செல்வம் முதலானவை
அல்பமானவை, நிலைஅற்றவை’ என்று ‘வேண்டா’ என்றீராகில், அவ்வளவினது அன்றே; முடிவில்லாததுமாய்
நிலைத்திருப்பதுமாய் இருக்குமன்றோ ஆத்மாநுபவம்; அதனை அநுபவித்தாலோ? என்ன, ‘நீ சொன்னது
பொருத்தமுள்ளதாயின் செய்யலாயிற்று; ‘அவை அல்பம், நிலையற்றவை’ என்ற இடம் சொரூபத்தைச்
சொன்னேனத்தனை: உன்னுடைய இனிமையைச் சொன்னதும் சுவாபம் இருந்தபடி சொன்னேனத்தனை; ‘அது தீது’
என்று விட்டும், ‘இது நன்று’ என்று பற்றுகிறேனும் அல்லேன்; உன்னைப் பற்றிற்றும் நீ ஆகையாலே,
அவற்றை விட்டதும் நீ அல்லாமையாலே’ என்கிறார். வகுத்த விஷயத்திலே குணம் அழகு முதலானவைகளும்
உண்டாகப் பெற்றேனித்தனை.
குறுகா நீளா -
2தன் இயல்பிலே குறுகுதலும் நீளுதலும் இன்றிக்கே இருக்கை. இறுதிகூடா - 3முற்றும்
அழிவு இன்றிக்கே இருக்கை. 4எனை ஊழி சிறுகா பெறுகா - கால வேறுபாடுபற்றிக்
குறைதலும் விரிதலும் இன்றிக்கே இருக்கை. அளவில் இன்பம் சேர்ந்தாலும் - 5இங்ஙனே
இருக்கையாலே முடிவின்றிக்கே இருக்கிற
1. “உறுமோ” என்றதனைத் திருவுள்ளம்பற்றி
அவதாரிகை
அருளிச்செய்கிறார். ‘நீ ஆகையாலே’ என்றது, வகுத்தசேஷி ஆகையாலே
என்றபடி. ‘நீ அல்லாமையாலே’
என்றது, அப்ராப்தங்கள் ஆகையாலே
என்றபடி. பற்றுவதற்கும் விடுவதற்கும் இவையே காரணங்களானால்
“மாயோன்” என்று, அழகுசீலம் முதலானவைகளைச் சொல்லுவான் என்?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘வகுத்த விஷயத்திலே’ என்று
தொடங்கி. “பல நீ காட்டிப் படுப்பாயோ” என்றதனால், செல்வம்
முதலானவைகள்
வேண்டா என்பது போதரும்.
2. ‘தன் இயல்பிலே’
என்றதனால், சம்சாரதசையில் இளமை முதலிய
நிலைவேறுபாடுகளால் உண்டாகின்ற ஞானத்தின் சுருக்கம்
பெருக்கங்களினின்றும் வேறுபடுத்தியபடி.
3. ‘முற்றும் அழிவு இன்றிக்கே
இருக்கை’ என்றது, சரீரநாசம்
இல்லாதிருத்தலைக் குறித்தபடி.
4. இப்போது இல்லாவிட்டாலும்
வேறு காலத்திலேதான் உண்டோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் “எனை யூழி” என்று தொடங்கி.
‘காலவேறுபாடுபற்றிக் குறைதலும் விரிதலும் இன்றிக்கே இருக்கை’
என்றது, கல்பத்தின் ஆதியிலே தோன்றிக்
கல்பத்தின் முடிவிலே
அழியும் தன்மை இன்றிக்கே இருக்கையைத் தெரிவித்தபடி.
5. ‘இங்ஙனே’
என்றது, மேலே கூறியவைகளைக் குறித்தபடி.
|