பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
462

1வண

    1வண்ணம் அருள்கொள் அணி மேகவண்ணா - வண்ணமானது - பிரகாரமானது, அருள்கொண்டிருப்பதாய், காண்பதற்கு இனிய மேகம்போன்ற வடிவையுடையவனே! அன்றிக்கே, வண்ணமானது - வடிவமானது, கண்டார் நெஞ்சினை இருளப் பண்ணக் கூடியதாயிருக்கை என்றுமாம். 2“மைப்படி மேனி” அன்றோ. அங்ஙனம் அன்றிக்கே, 3மேகத்தினுடைய அகவாய் கல் என்னும் படியாயிற்றுத் திருமேனியில் உண்டான திருவருளின் மிகுதி இருக்கிறபடி என்னலுமாம். மாய அம்மானே - வெறும் வடிவழகே அன்றிக்கே, ஆச்சரியமான குணங்களாலும் செயல்களாலும் பெரியன் ஆனவனே! எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே - 4தெய்வப்பிறவியிலே பிறந்து ஒரு சாதனத்தைச்செய்து அதனாலே பெற்றுப் புஜிக்கும்போது இனிதாகை அன்றிக்கே, 5இன்னார்க்கு

 

1. “வண்ணமருள்கொள் அணிமேக வண்ணா” என்பதற்கு இருவகையாகப்
  பொருள் அருளிச்செய்கிறார். “வண்ணம்” என்று, சுபாவமாய், கொள்கை
  - உடைத்தாகையாய், கிருபையோடு கூடின சுபாவத்தையுடையதாய்க்
  காட்சிக்கு இனியதான மேகம்போன்ற வடிவையுடையவனே என்பது
  முதற்பொருள். “அருள்கொள் வண்ணம்” என்பதனை, மேகத்திற்கு
  அடைமொழியாக்குதல் அன்றிக்கே, அருளோடே கூடின
  சுபாவத்தையுடையவன் என்று எம்பெருமானுக்கு விசேஷணமாக்குதல்.
  இரண்டாவது பொருள், “வண்ணம்” என்று, வடிவாய், வடிவாலே மருளை
  உண்டாக்கக்கூடியதாய்க் காட்சிக் கினியதான மேகம்போன்ற
  வடிவையுடையவனே! என்பது. மருள் கொள் வண்ணம் என்று கூட்டுவது.
  இப்பொருளிலும் “மருள்கொள் வண்ணம்” என்பதனை மேகத்துக்கும்,
  எம்பெருமனானுக்கும் விசேஷணமாகக்கொள்க.

2. இரண்டாவது பொருளுக்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘மைப்படி மேனி’
  என்று. இது, திருவிருத்தம், 94.

3. மூன்றாவதாக வேறும் ஒருகருத்து அருளிச்செய்கிறார் ‘மேகத்தினுடைய’
  என்று தொடங்கி. இப்பொருளில், “அருள்கொள் வண்ணம்” என்பது,
  திருமேனிக்கு அடை. திருமேனியின் திருவருளின் மிகுதியைச்
  சொல்லுகையாலே மேகத்தின் அகவாய் கல் என்னும்படி இருக்கிறது
  என்பது கருத்து.

4. “எண்ணம்” என்றது, நினைத்த அளவிலே என்றபடி. “எண்ணம் புகுந்து
  தித்திக்கும் அமுது” என்கையாலே, தேவர்களின் அமுதத்தினின்றும்
  வேறுபடுத்துகிறார் ‘தெய்வப் பிறவியிலே’ என்று தொடங்கி.

5. இன்னாருடைய எண்ணத்திலே என்று விசேடிக்காமல் பொதுவாக
  “எண்ணம்” என்று அருளிச்செய்ததற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘இன்னார்க்கு’ என்று தொடங்கி.