| 
ஈ
 
    
ஈடு :- 
பத்தாம்பாட்டு. 1“சிலவண்டுகளைக் குறித்து, அவர் இத்தலையில் சத்தையும் இல்லை 
என்று இருப்பர், அவளும் உளள் என்று சொல்லுங்கோள் என்று சொல்லுகிறாள்” என்று ஆளவந்தார் 
அருளிச்செய்வர். “இத்தலை இல்லையாகில் அத்தலை உண்டாகக் கூடாது; ‘பெண்பிறந்தார் காரியம் 
எல்லாம் செய்தோம்’ என்று கிருதக்கிருத்யராயிருக்குமவர்க்கு, ரக்ஷ்யவர்க்கத்திலே நானும்ஒருத்தி 
உண்டு என்று சொல்லுங்கோள்” என்று எம்பெருமானார் அருளிச் செய்வர். 
 
    வேறுகொண்டு -
2திக்குகள்தோறும் முதலிகளைப் போகவிடா நிற்கச்செய்தே திருவடி கையில் திருவாழிமோதிரம் 
கொடுத்து விட்டதுபோலே காணும். 3சுக்கிரீவ மஹாராஜர் அநுமாரிடத்தில் 
1. “வண்டினங்காள்! என்னையும் 
உளள் என்மின்கள்” என்றதனைக் 
  கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார். தலைவி, தன்னை 
“உளன்” 
  என்று தலைவனுக்கு உணர்த்துங்கோள் என்கையாலே, தலைவன் ‘தலைவி 
  இலள்’ என்று நினைத்திருந்தானாக 
வேண்டுமன்றோ? அதனைத் 
  திருவுள்ளம் பற்றிச் ‘சத்தை இல்லை என்றிருப்பர்’ என்கிறார். அப்போது, 
  “என்னையும்” என்ற உம்மைக்கு, நிறம் தொடக்கமானவை அழிந்து 
  போயினமை போன்று, சத்தையும் அழிந்தது 
என்று பொருளாகவேண்டும் 
  என்று திருவுள்ளம் பற்றிச் ‘சத்தையும் இல்லை என்றிருப்பர்’ என்கிறார். 
  கிருதக் கிருத்யர் - செய்யவேண்டிய காரியங்கள் எல்லாவற்றையும் செய்து 
  முடித்தவர். 
 
2. வேறுகொண்டு - 
வேறாகக்கொண்டு. அதாவது, மற்றைய பறவைகளைக் 
  காட்டிலும், வண்டுகள் காரியம் செய்து முடிக்கும் 
ஆற்றல் வாய்ந்தவை 
  என்று நிச்சயித்து என்றபடி. அதனைத் திருஷ்டாந்த மூலம் 
  அருளிச்செய்கிறார் 
‘திக்குகள் தோறும்’ என்று தொடங்கி. 
 
  ஆண்டுகடந் தப்புறத்து 
மெப்புறத்து மொருதிங்கள் அவதி யாகத் 
  தேண்டி இவண் வந்தடைதிர் 
விடைகோடிர் கடிதென்னச் செப்பும் வேலை 
  நீண்டவனு மாருதியை 
நிறையருளால் முகநோக்கி நீதி வல்லோய்! 
  காண்டிஎனிற் குறிகேட்டி 
எனவேறு கொண்டிருந்து கழற லுற்றான். 
   
    இனையவா 
றுரைசெயா இனிதின்ஏகுதி எனா 
    வனையுமா மணிநன்மோதிர 
மளித் தறிஞ!நின் 
    வினையெலா 
முடிகெனா விடைகொடுத் துதவலும் 
    
புனையும்வார் கழலினான் அருளொடும் போயினான். 
 
  என்பன, கம். கிட். நாட. 
32. 71. 
 
3. வேறும் ஒரு திருஷ்டாந்தம் 
காட்டுகிறார் ‘சுக்கிரீவ மஹாராஜர்’ என்று 
  தொடங்கி. 
 
  “விசேஷேண து ஸூக்ரீவோ 
ஹநூமதி அர்த்தம் உக்தவாந்” 
 
  என்பது, ஸ்ரீராமா. கிஷ். 
44 : 1. 
 
      கம்பராமாயணம் நாடவிட்ட 
படலம், 5-முதல் 8-முடியவுள்ள 
  செய்யுட்களை ஈண்டுக் காணல் தகும். 
 |