|
1இ
1இவைதாம்
ஆறுபதங்களையுடையனவன்றோ. வெறி வண்டு இனங்காள் - 2உங்களுக்கு என்காரியம் செய்தல்லது
நிற்க ஒண்ணாதாயிருந்தது. 3கலவியால் உண்டான வேறுபாடு அடங்கலும் வடிவிலே தோன்றும்படியாயிருந்தது.
வெறி - வாசனை. வாசனையையுடைத்தாயிருக்கை. 4தனித்துப் போனாலும் வழிக்குப் பாதேயம்
போந்திருந்ததே! என்றது, உடம்பை மோந்துகொண்டு போக அமைந்து காணும் இருக்கிறது என்றபடி.
இவைதமக்குப் பிரிவு இல்லை என்பாள் ‘இனங்காள்’ என்கிறாள். 5“ஸர்வகந்த:”
என்ற விஷயத்தோடே அணைந்த இவளுக்கு இவற்றின் பரிமளம் கண்டு ஆச்சரியப்படும்படி காணும் வாசனையும்
கூட மறந்தபடி.
1. வண்டுகளுக்கு, துவயத்தோடு
எவ்வகையாலே ஒப்பு? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘இவைதாம்’ என்று தொடங்கி.
‘இவைதாம்’ என்றது,
வண்டுகளையும், துவயம் என்னும் மந்திரத்தையும். வண்டுகளுக்கு
‘அறுபதம்’
என்னும் பெயர் உண்மை ஈண்டு நினைவுகூர்தல் தகும்.
துவயம் என்னும் மந்திரம்,
ஸ்ரீமந் நாராயண
சரணௌ சரணம் பிரபத்யே
ஸ்ரீமதே நாராயணாய
நம: என்பது.
இதுவும், ‘ஸ்ரீமந் நாராயண
சரணௌ’ என்றும், ‘சரணம்’ என்றும்,
‘பிரபத்யே’ என்றும், ‘ஸ்ரீமதே’ என்றும், ‘நாராயணாய’ என்றும்,
‘நம:’
என்றும் ஆறுபதங்களையுடையது. வண்டுகளும் ஆறு கால்களை
யுடையனவாதலின் ‘அறுபதம்’ என்ற பெயரால்
குறிக்கப்பெறும் என்க.
2. “இனங்காள்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘உங்களுக்கு’ என்று
தொடங்கி. என்றது, நான் தனித்துத்
துன்புற்றவளாயிருக்கும்போது,
உங்களுக்குப் போகம் ரசிக்காமையாலே, என்காரியம் செய்தல்லது நிற்க
ஒண்ணாது என்றபடி.
3. “வெறி” என்றதற்கு,
பாவம் அருளிச் செய்கிறார் ‘கலவியால் உன்டான’
என்று தொடங்கி.
4. “வெறி” என்றதற்கு,
வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார் ‘தனித்துப்
போனாலும்’ என்று தொடங்கி. அதனை விவரணம்
செய்கிறார் ‘உடம்பை’
என்று தொடங்கி. பாதேயம் - தோட்கோப்பு.
5. “சர்வகந்த:”
என்கிற தலைவனோடே கலந்ததனாலுண்டான வாசனை
உளதே இவளுக்கு, அதனை மோந்துகொண்டு தரித்திருக்கலாகாதோ
இவள்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘சர்வ கந்த:’ என்று
தொடங்கி. கந்தம் - வாசனை.
|