பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
68

பல உளவ

பல உளவாயிருந்தன: 1“பக்ஷீச - பறவையானது சிறகினை விரித்தது. ஸாகா நிலய: - உலர்ந்த கொம்பிலன்றிக்கே, பசுமையையுடைத்தான பணையிலே இருந்தது. மரத்தை வலமாக வந்து, தழைத்த பணையிலே நற்றரிக்க இருந்தது என்றபடி. ப்ரஹ்ருஷ்ட: - 2அங்குள்ள பழம் முதலானவற்றை உண்பதனால் உண்டான உவகை வடிவிலே தோற்றும்படி இருந்தது. புந: புந: ச உத்தம ஸாந்த்வ வாதீ - மேன் மேலென நல்வார்த்தைகள் சொல்லத் தொடங்கிற்று அதற்குமேலே, ஸுஸ்வாகதாம் வாசம் உதீரயாந: - இவ்வளவு அல்ல கண்டீர் அத்தலைப்பட்டது என்று சொல்லுமாறுபோலே இருந்தது. புந:புந: சோத யதீவ-வரவு நிச்சயமான பின்பு, குளித்தல் ஒப்பித்தல் செய்யாதிருக்கிறது என்? என்று சொல்லுமாறுபோலே இருந்தது. ஹ்ருஷ்ட: - 3வந்தால் பிறக்கும் வேறுபாடு தோற்ற உடம்பு மயிர் எறிந்திருந்தது. 4ததாகதாம் - “ரஹஸ்யஞ்ச பிரகாஸஞ்ச - இரகசியச் செயல்களும் வெளிப்படைச் செயல்களும்” என்று கொண்டு பிரமனுடைய திருவருளாலே உள்ளபடி எல்லாம் தோற்றக்கடவதாகப் பெற்றுடையனான

 

1. “பக்ஷீச ஸாகாநிலய: ப்ரஹ்ருஷ்ட:
   புன:புனஸ்சோத்தம ஸாந்த்வ வாதீ
   ஸு ஸ்வாகதாம் வாசம் உதீரயாந:
   புன:புன: சோதயதீவ ஹ்ருஷ்ட:”

  என்பது, ஸ்ரீராமா. சுந். 27 ; 51.

      ‘அண்டஜம்’ என்னாமல், “பக்ஷீ” என்றதற்கு, பாவம், ‘பறவையானது’
  என்று தொடங்கும் வாக்கியம். ‘காஷ்டநிலய:’ என்னாமல், “ஸாகாநிலய:”
  என்றதற்கு, பாவம் ‘உலர்ந்த’ என்று தொடங்கும் வாக்கியம். “நிலய:”
  என்றதற்கு, பாவம் “மரத்தை” என்று தொடங்கும் வாக்கியம்.

2. பறவைகள் இரை எடுத்தால் நல்ல சகுனமாகையாலே, அதனை
  அருளிச்செய்கிறார் ‘அங்குள்ள’ என்று தொடங்கி.

3. ‘வந்தால் பிறக்கும் வேறுபாடு’ என்றது, பெருமான் வந்தால் பிராட்டிக்குப்
  பிறக்கும் சந்தோஷம் என்றபடி.

4. ததாகதாம் - வாக்கினாலே சொல்லுதற்கு முடியாத நிலையினையடைந்தவள்.
  இப்பொருளையே விளக்குகிறார் ‘ரஹஸ்யஞ்ச’ என்று தொடங்கி.

  “ததாகதாம் தாம்வ்யதிதாம் அநிந்திதாம் வ்யபேதஹர்ஷாம் பரி தீநமாநஸாம்
   சுபாம் நிமித்தாநி சுபாநி பேஜிரே நரம் ஸ்ரியாஜுஷ்டமிவ உபஜீவிந:”

  என்பது, ஸ்ரீராமா. சுந். 29 : 1.

  “ரஹஸ்யஞ்ச பிரகாஸஞ்ச யத்விருத்தம் தஸ்ய தீமத:
   ராமஸ்ய ஸஹ ஸௌமித்ரே ராக்ஷஸாநாம் ச ஸர்வஸ:”

  என்பது, ஸ்ரீராமா. பால. 2 : 33.