|
1இவ
1இவ்வளவில்
ஆறியிருக்குமவன் அன்றே. 2“பெரிய ஆபத்தை அடைந்தது” என்று கொண்டு ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய
துயரஒலி செவிப்பட்டபோது, திருவடிநிலை கோத்து எழுந்தருளப்பற்றாமை வெறும் தரையிலே பத்து எட்டு
அடி இட்டும், உலகத்தைச் சிருஷ்டித்தல் முதலான செயல்களினும் நினைவுக்கு மேற்பட ஒன்றும் காணாமையாலே,
இப் பதற்றம் இருந்த படியால் ‘இது இவ் வளவுகளில் அன்று; இதற்கு அடி என்?’ என்று திவ்ய அந்தப்புரம்
கைநெருக்கும்படியாய், கருத்து அறிந்து நடப்பவனான பெரியதிருவடியைப் பண் செய்து ஏறப் பெறாதே வெறும்புறத்தே
மேற்கொண்டு 3“பகவானுடைய விரைவுக்கு வணக்கம்” என்று அறிவுடையார் ஈடுபடும்படி வந்து
தோற்றினாற்போலேயும்; 3திரௌபதியைத் துச்சாதனன் நலிகிறபோது ரக்ஷகராகப் பிரசித்தரான
கணவன்மார் ஐவர் இருக்க, “கோவிந்தா! என்று அழைத்தாள் என்பது யாது ஒன்று உண்டோ?” என்கிற
படியே, நம்மை ரக்ஷகராக நினைத்துக் கூப்பிட, 4“வெகுதூரத்தில் வசிக்கிற என்னை” என்கிறபடியே.
நான் அண்மையில் இருப்பவனாய் உதவப் பெற்றிலேன் அவள் ஆபத்துக்கு என்று நொந்து ‘அவள் தனக்கு
அடுக்கும்படி செய்தாள், நான் அவதரித்தே அவதாரப் பிரயோஜனம் ஒன்றும் பெற்றிலேன்’ என்று
இழவாளனாய், தர்மபுத்திரன் தலையிலே முடியையும் வைத்து, இவள்குழலையும், முடிப்பித்துப் பகை
1. செவிப்பட்டால் மெள்ள
வரலாகாதோ? என்ன, ‘இவ்வளவில்’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
2. துயர ஒலி கேட்டு
விரைந்து வந்ததற்கும், ஆறி இராமைக்கும் மூன்று
திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘பெரிய ஆபத்தை’
என்று தொடங்கி.
3. “பரமாபதம்
ஆபந்ந: மநஸா சிந்தயத்தரிம்
ஸது நாகவர: ஸ்ரீமான்
நாராயண பராயண:”
என்பது, மஹாபாரதம்.
“அதந்த்ரித
சமூபதி ப்ரஹித ஹஸ்தம் அஸ்லீக்ருத
ப்ரணீத மணிபாதுகம்
கிமிதிச ஆகுலாந்த:புரம்,
அவாஹந பரிஷ்க்ரியம்
பதகராஜம் ஆரோஹத:
கரிப்ரவர
ப்ரும்ஹிதே பகவத: த்வராயை நம:”
என்பது, ஸ்ரீ ரங்கராஜஸ்தவம்
உத்தர சதகம், 57.
4. “கோவிந்தேதி
யதா க்ரந்தத் க்ருஷ்ணாமாம் துரவாஹிநம்
ருணம் ப்ரவ்ருத்தமிவ
மே ஹ்ருதயாத் ந அபஸர்பதி”
என்பது, பாரதம் உத். 58
: 22.
|