பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
77

New Page 1

கொண்டு, 1அவர்கள் கால்களைக் கட்டிப் பொறுப்பித்துக் கொள்ளுமவன் அலனோ. இனி, 2“மனிதர்களுக்குத் துக்கம் வருகின்ற காலத்தில் அவர்கள் துக்கத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமான துக்கத்தைத் தான் அடைகின்றான்” என்று பொதுவிலே இருக்கும் படி கண்டால், காதலி ஒருதலையானால் சொல்லவேண்டா அன்றோ.

    3
இப்படிகளாலே திருவுள்ளம் போர இரங்கி, 4‘நாம் கிட்டி நின்று கையைக் காலைப் பிடிக்க வேண்டும்படியான விஷயம் பறவைகளின் கால்களிலே விழும்படி நாம் பிற்படுவதே! நமக்கு இனி ஒரு ஆண்தன்மையாவது என்? அங்கு நாம் இனிப் போய்ச் செய்வது என்? இங்கிருந்து செய்வது என்?’ என்று கொண்டு தடுமாறி, இத்தலையோடே கலந்தல்லது தரிக்கமாட்டாதானாய், இவர்கள் இருந்த இடத்துக்கு அண்மையில் வந்து, பிரணயகோபத்தாலே அணுக ஒண்ணாதபடி இருக்கிற இருப்பைக் கண்டு, இத்தலையில் எண்ணத்தைக் குலைத்து நாம் கூடினோம் ஆம் படி என்? என்று சிந்தித்தான்: சிந்தித்து ‘அழகு கொண்டு வெல்வோம்’ என்று பார்க்கில் அழகினைக் கொண்டு தண்ணீர் வார்ப்பார் இலர் இக் கோஷ்டியில்; 5“கருமை நிறம் பொருந்திய கண்களையுடையவள்” என்கிற தன்னேற்றம் உண்டேயன்றோ இத் தலைக்கு. இனி, ‘மேன்மைகொண்டு வெல்வோம்’ என்று பார்க்கில், அந்தப்புரத்தை 6யானைக்கால்இட்டுத் துகைப்பித்து உண்ண ஒண்ணாதே. இனி, இவ் விஷயத்தைப்

 

1. மேலேகாட்டியுள்ள சுலோகத்தில் “பிரஸீதந்து” என்றதற்கு, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘அவர்கள் கால்களை’ என்று தொடங்கி.

2. இவள் துன்பம் கண்டு அவன் நோவுபடும் பிரகாரத்தை அருளிச் செய்கிறார்
  ‘மனிதர்களுக்கு’ என்று தொடங்கி.

  “வ்யஸநேஷு மநுஷ்யாணாம் ப்ருசம் பவதி துக்கித:
   உத்ஸவேஷு ச ஸர்வேஷு பிதேவ பரிதுஷ்யதி”

  என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 40.

3. ‘இப்படிகளாலே’ என்றது, முன் கூறிய திருஷ்டாந்தங்களில் கூறிய
  படிகளாலே என்றபடி.

4. சர்வேசுவரன் செய்யும் பிரகாரங்களை விரிவாக அருளிச்செய்கிறார் ‘நாம்
  கிட்டி நின்று’ என்று தொடங்கி. வேண்டும்படியான விஷயம் - தலைவி.

5. “ராகவோர்ஹதி வைதேஹீம் தம் ச இயம் அஸிதேக்ஷணா” என்பது,
   ஸ்ரீராமா. சுந். 16 : 5.

6. ‘யானைக்காலிட்டுத் துகைப்பித்து உண்ண ஒண்ணாதே’ என்றது,
  பலாத்காரம் பண்ணலாகாது என்றபடி. ரசிகத்வத்திற்குப் பங்கம் வரும்
  என்பது கருத்து.