|
அ
அடுப்பது என்? என்று,
1“இப்படிப் பலவகையாக எண்ணி” என்கிறபடியே எண்ணி, ‘நம் தலையும் அவள் காலும் கிடந்ததாகில்
காலைக் கட்டிப் பொருத்திக்கொள்ளுகிறோம்’ என்று அறுதியிட்டான். 2தலையான உபாயம்
இதனைக் காட்டிலும் இல்லையே. 3இதுதான் அடியிலே கண்டது ஒன்றே யன்றோ.
ஆக, இப்படி அறுதி
யிட்டு, தன் நிறத்தோடு ஒக்க விகல்பிக்கலாவது ஒரு சோலை உள்ளிட்டு, அவளுக்கும் தோழிமார்க்கும்
தெரியாதபடி கிட்டச்சென்று, அவர்களைக் காணப்பெறாதே விடாய்த்தவன் கண்கள் ஆரளவும் நின்று
4விளைநீர் அடைத்துக்கொண்டு கிருதார்த்தனாய் நின்றான். ஆலோகத்தின்பின் ஆலாபம்
முதலியவைகளிலே சிரத்தை இருக்குமன்றோ, அதுவும் பெற்றிலன். அவ்வளவிலும் தன்னுடைய பிராணனுக்குத்
தாரகமாக இருக்கின்ற இவர்களுடைய பூவை, கிளி தொடக்கமானவற்றினுடைய இனிய பேச்சுக்களைக் கேட்கப்
பெறாமையாலும் மிகவும் தளர்ந்து, 5‘தானும் அவளுமாகச் சேர்ந்திருக்கும்போது அவளிடத்திற்
காட்டிலும் தன் பக்கல் அன்பு இரட்டித்தன்றோ தோழிமார்களுக்கு இருப்பது; பிரிவிலும் அப்படியே’
என்று இருந்தான். அவர்கள் 6அங்ஙனம் அன்றிக்கே அவளைக் காட்டிலும் கோபம்
மிக்கு இருந்தார்கள்.
1. “ஏவம் பஹு விதாம் சிந்தாம்
சிந்தயித்வா மஹாகபி:
ஸம்ஸ்ரவே மதுரம்
வாக்யம் வைதேஹ்யா வ்யர்ஜஹார ஹ”
என்பது, ஸ்ரீராமா. சுந். 31
: 1.
2. இதனால் கோபம்
தீருமோ? என்ன, அதற்கு விடை அருளிச் செய்கிறார்
‘தலையான’ என்று தொடங்கி. என்றது, சிலேடை.
3. இதனை அறிந்தபடி
எங்ஙனே? என்ன, ‘இதுதான்’ என்று தொடங்கி
அதற்கு விடை அருளிச்செய்கிறார். “தமேவ சரணம் கத:”
என்ற
காகத்தைக் கிருபையாலே ரக்ஷிக்கையாலே அடியிலே கண்டது ஒன்று
என்றபடி.
4. ‘விளைநீர்
அடைத்து’ என்றது, வயல் விளையும் அளவுக்கு ஒருகாலே
நீர்கட்டுதல். ஆலோகம் - பார்த்தல். ஆலாபம்
- வார்த்தை பேசுதல்.
5. சமாதானம் செய்கைக்குத்
தோழிமார் இலரோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘தானும் அவளுமாக’ என்று தொடங்கி.
6. ‘அங்ஙனம் அன்றிக்கே’
என்றது, தான் நினைத்தபடி யன்றிக்கே என்றபடி.
|