| 
வ
 
    விசேடக்குறிப்பு 
:- குருகினங்காள்! 
திருவண்வண்டூர் உறையும் பெருமானைக் கண்டு கைகூப்பி வினையாட்டியேன் காதன்மை சொல்லீர் என்க. 
வைகல் - நாள். செய் - வயல். 
 
    இத்திருவாய்மொழி, 
கலிநிலைத்துறை. 
 
    ஈடு :- முதற்பாட்டு.
1சில குருகுகளை நோக்கி, திருவண்வண்டூரிலே சென்று எம்பெருமானுக்கு என் நிலையை அறிவியுங்கோள் 
என்கிறாள். 
 
    வைகல்-நாடோறும்.
2உங்கள் அளவு நீர்மையுடையார் சிலரோடே கலக்கப்பெறாமையன்றோ எனக்கு இப் 
பிரிவு விளைந்தது; அவ்விழவு எல்லாம் உங்களைக்கொண்டு தீரலாம்படியாயன்றோ எனக்கு இருக்கிறது.
3ஒருகால் கலந்து பொகட்டுப் போன அவனைப்போல் அன்றிக்கே நீங்கள் எப்போதும் 
இங்கே வசிக்கும்படியாகப் பெற்றேனே! உங்கள் நீர்மையில் ஏற்றம் இருந்தபடி என்! பூங் கழிவாய்-அழகிய 
கழியிடத்து. அன்றிக்கே, பூத்த கழியிடத்து என்னவுமாம். 4ரக்ஷகனானவன் கைவிடுவது, 
பாதகக்கூட்டங்களானவை மிகைக்கின்ற இவ்வளவிலே நீங்கள் முகங்காட்டுவதே! அழகியசோலை, குளிர்ந்த 
தென்றல், இனியவாசனை தொடக்கமான இவையுமுளவன்றோ. 5பிரிந்தவனே பாதகனாகை அன்றிக்கே, 
இருந்த தேசமும் 
1. “குருகு இனங்காள்! திருவண்வண்டூர் 
உறையும் பெருமானைக் கண்டு 
  வினையாட்டியேன் காதன்மை சொல்லீர்” என்றதனைக் கடாக்ஷித்து 
  அவதாரிகை 
அருளிச்செய்கிறார். 
 
2. “வந்து” என்றதனைக் 
கடாக்ஷித்து, பாவம் அருளிச்செய்கிறார் ‘உங்கள் 
  அளவு’ என்று தொடங்கி. 
 
3. “வைகல் வந்து” 
என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘ஒரு கால்’ என்று 
  தொடங்கி. 
 
4. ‘பூத்த கழியிடத்து’ 
என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘ரக்ஷகனானவன்’ 
  என்று தொடங்கி. ‘பாதகக் கூட்டங்கள்’ 
எவை? என்ன, ‘அழகிய சோலை’ 
  என்று தொடங்கி, அதற்கு விடை அருளிச் செய்கிறார். 
 
5. இவற்றால் பலித்த 
பொருளை அருளிச்செய்கிறார் ‘பிரிந்தவனே’ என்று 
  தொடங்கி. 
 |