New Page 1
|
மூன்றாந்திருவாய்மொழி - முன்னுரை |
105 |
வெள்ளைச் சுரிசங்கொடு
ஆழி ஏந்தி - 1‘தவள ஒண்சங்கு சக்கரம்’ என்றும், 2‘கூரார் ஆழி வெண்சங்கு’
என்றும், 3‘சங்கு சக்கரங்கள் என்று கைகூப்பும்’ என்றும் கையும் திருவாழியுமான அழகு
கைவிடாதே இவரைத் தொடருகிறபடி. முகில் வண்ணன் அன்றோ? அந்த நிறத்துக்குப் 4பரபாகமான
வெளுப்பையும் சுரியையுமுடைத்தான ஸ்ரீபாஞ்சஜன்யத்தையும், 5அங்ஙனம் ஒரு விசேடணம் இட்டுச்
சொல்ல வேண்டாதபடியான அழகையுடைத்தான திருவாழியையும் ஏந்தி, தாமரைக் கண்ணன்- 6‘தாமரைக்
கண் என்றே தளரும்’ என்றது. பின் நாட்டுகிறபடி. 7திருமேனிக்குத் திவ்விய ஆயுதங்கள்
பிரகாசகமாய் இருக்குமாறு போலே, ஆத்துமகுணங்களுக்குத் திருக்கண்கள் பிரகாசகமாய் இருக்கிறபடி.
என்றது, ‘அகவாயில் தண்ணளி எல்லாம் கண்வழியே அன்றோ தோற்றுவது?’ என்றபடி. பகைவார்களுக்குத்
திவ்விய ஆயுதங்களோடு ஒக்கத் திருக்கண்களும் விரோதியாய்த் தோற்றுமாறு போலே அன்றோ,
அனுகூலர்க்குத் திருக்கண்களைப் போன்று திவ்விய ஆயுதங்களும் அழகுக்கு உடலாகத் தோற்றுகிறபடி?
8திருக்கண்களோடே திவ்விய ஆயுதங்களையும் திவ்விய ஆயுதங்களோடே திருக்கண்களையும்
சேர்த்து அனுபவிப்பர்கள். 9ஆயுதங்களோடே
___________________________________________________________________
1. திவ்விய ஆயுதங்களை
முன்னே கூறுவதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘தவள
ஒண்சங்கு’ என்று தொடங்கி. இது, திருவாய்.
6. 5:1.
2. இது. திருவாய். 6.
9:1.
3. இது, திருவாய். 7.
2:1.
4. பரபாகம்-பல நிறங்கள்
கலத்தலால் உண்டாகும் அழகு.
5. விசேஷணம் கொடாது
வாளா ‘ஆழி’ என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார்,
‘அங்ஙனம்’ என்று தொடங்கி.
6. ‘தாமரைக்கண்’ என்றதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘தாமரைக்கண்’ என்று
தொடங்கி.
7. திவ்விய ஆயுதங்களோடே
திருக்கண்களைச் சேர்த்துக் கூறியதற்கு இரண்டு
வகையில் பாவம் அருளிச்செய்கிறார்,
‘திருமேனிக்கு என்று தொடங்கியும்,
‘பகைவர்களுக்கு’ என்று தொடங்கியும்.. என்றது, ‘பிரகாசிக்கின்ற
தன்மையும்,
மனத்தைக் கவர்கின்ற தன்மையும் இரண்டற்கும் ஒத்திருக்கையாலே சேர்த்துச்
சொன்னார்’ என்றபடி.
8. திவ்விய ஆயுதங்களோடே
அவயங்களைச் சேர்த்தும், திவ்விய அவயங்களோடே
திவ்விய ஆயுதங்களைச் சேர்த்தும் ஆழ்வார்கள்
அனுபவிப்பார்கள் என்கிறார்,
‘திருக்கண்களோடே’ என்று தொடங்கி.
9. ‘இப்படிச்
சேர்த்து அனுபவிப்பதற்குக் காரணம் என்?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார்,
‘ஆயுதங்களோடே’ என்று தொடங்கி.
|