| த 
  
    | 
மூன்றாந்திருவாய்மொழி - பா. 1 | 
    107 |  
திரிபாத்விபூதியிலும்
இடம் உடைத்தாயிருக்கை. 1திருவடி திருத்தோளில் ஏறி அங்கு உள்ளார்க்கு உஜ்ஜீவனமாகச்
சாரிகை வந்து காட்டுமாறு போலே, இவர் நெஞ்சினுள்ளே தடை இல்லாமல் அழகு செண்டு ஏறுகிறபடி. நெஞ்சினூடே-
2‘அகவாயில் உள்ளது கண்களுக்குத் தெரியாதோ?’ என்று இருக்கிறார்கள் ஆயிற்று இவர்கள்.
3‘குற்றம் அற்றவனான அந்தப் பரமாத்துமாவானவன் உன்னுடைய உடலில் நிறைந்து நிற்கின்றான்,’
என்னுமாறு போலே. ‘நெஞ்சில் இல்லையாகில் நானும் இல்லை என்று நினைத்து இருக்கலாயிற்றுக்காண்’
என்று இருக்கிறாள் இவள். 4ஒரு வாசத்தடத்தில் அன்னங்கள் சக்கரவாகங்களை
போன்ற ஆழ்வார்களும், காடுபட அலர்ந்த தாமரை போலே இருக்கிற திவ்விய அவயவங்களும், அத்தடாகத்தில்
நீரும் இலையும்போலே இருக்கிற திருமேனியுமாய், அதனைக் கினிய ஒரு மேரு தாங்கினாற்போலே 
__________________________________________________________________ 
1. ‘கடாகின்ற’ என்றதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘திருவடி’ என்று தொடங்கி.சாரிகை-வையாளி. அழகு செண்டு ஏறுகை-விளையாட்டுச்
சாரிகை வருதல்; அழகு
 காட்டிக் கொண்டு புறப்படுகையுமாம்.
 
 2. ‘நெஞ்சினூடே’ என்றதற்கு
பாவம் அருளிச்செய்கிறார், ‘அகவாயில்’ என்று
 தொடங்கி.
 
 ‘அடுத்தது காட்டும்
பளிங்குபோல் நெஞ்சம்
 கடுத்தது காட்டும் முகம்.’
 
 என்பது, திருக்குறள்.
 
 3. ‘அகவாயில் உள்ளது மேலே
தோற்றும்’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
 ‘குற்றம் அற்றவனான’ என்று தொடங்கி.
 
 ‘நிர்குண: பரமாத்மாஸென
தேஹம் தே வ்யாப்ய திஷ்ட்டதி’
 
 என்பது, பாரதம், ஆரண்.
 
 4. மேலே போந்தவற்றையெல்லாம்
சேர்த்து, பாவம் அருளிச்செய்கிறார், ‘ஒருவாசத்
 தடத்தில்’ என்று தொடங்கி, கினிய-கபளீகரிக்க.
 
 ‘மாயக் கூத்தா! வாமனா!
வினையேன் கண்ணா! கண்கைகால்
 தூய செய்ய மலர்களாச்
சோதிச் செவ்வாய் முகிழதாகச்
 சாயல் சாமத் திருமேனித்
தண்பா சடையா தாமரைநீள்
 வாசத் தடம்போல்
வருவாளே! ஒருநாள் காண வாராயே.’
 
என்பது, திருவாய். 8. 5;1.
 கருமுகில் தாமரைக்
காடு பூத்துநீடு
 இருசுடர் இருபுறத் தேந்தி
ஏடலர்த்
 திருவொடும் பொலியவொர்
செம்பொற் குன்றின்மேல்
 வருவபோற் கழலுன்மேல்
வந்து தோன்றினான்.
 
என்பது, கம்பராமா. திருவவதாரப்.
13. |