வ
|
முதல் திருவாய்மொழி - பா. 1 |
11 |
விசேடக்குறிப்பு
: குமை தீற்றுதல் - துன்பத்தை நுகரச்செய்தல்.’ குமை தீற்றி’ நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்,’
என்க. நலிவான் - வினையெச்சம். ‘உன் பாத பங்கயம் நண்ணிலாவகையே எண்ணுகின்றாய்,’ என்க.
மாயன் -மூலப்பகுதியையுடையவன்.
இத்திருவாய்மொழி,
ஆசிரியத்துறை.
ஈடு :
முதற்பாட்டு. 1‘உன்னால் அல்லது செல்லாதபடியாய்
உன் திருவடிகளிலே சரணம் புகுந்த என்னை இந்திரியங்களாலே நலியப் பாராநின்றாய்,’ என்கிறார்.
உள் நிலாவிய ஐவரால்
குமை தீற்றி என்னை உன் பாதபங்கயம் நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய் -
2இரட்சகன் அண்மையில் இருத்தல் தவிர்ந்து கொலைஞர் அண்மையில் இருத்தலாயிற்றுக்காண்.
3தேவா எனக்குப் பகை புறம்பிட்டு வருகிறது என்றோ இருக்கிறது? 4உள்ளானாலும்,
போக்கு வரத்து உண்டாமாகில் படைப்போது அறிந்து இறாய்க்கலாம் அன்றோ? நிலாவிய -
இருக்கிற. 5ஆக, பாதகர் கூட்டம் அந்தரங்கமாய் நின்று நலிகிறபடியைத் தெரிவித்தபடி.
6‘தேகத்திற்கு வேறுபட்டதாய் இருப்பது ஓர் ஆத்துமவஸ்து உண்டு,’ என்று அறிகிலர்;
இவையே உள்ளே இருக்கின்றன என்றிருக்கிறார். 7‘இப்படி நலியா நின்றாலும், ஒருவர்
இருவராகில் அறிந்து விலக்கலாமன்றோ?’
_________________________________________________________________________
1. ‘என்னை ஐவரால்
குமை தீற்றி நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்’ என்பனவற்றைக்
கடாட்சித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. முன் இரண்டு அடிகட்குக்
கருத்து அருளிச்செய்கிறார், ‘இரட்சகன்’ என்று தொடங்கி.
3. ‘உள்’ என்றதற்கு பாவம்
அருளிச்செய்கிறார், ‘தேவர்’ என்று தொடங்கி.
4. ‘நிலாவிய’ என்ற நிகழ்காலத்துக்குப்
பொருள் அருளிச்செய்கிறார், ‘உள்ளானாலும்’ என்று
தொடங்கி. படைப்போது - போர் செய்யுங்காலம்.
5. ‘தேவர், எனக்கு’ என்று
தொடங்கி மேல் அருளிச்செய்த வாக்கியத்தை விவரணம்
செய்கிறார், ‘ஆக’ என்று தொடங்கி.
6. ‘நிலாவிய ஐவர்’ என்கிறவருடைய
மனோபாவத்தை அருளிச்செய்கிறார், ‘தேகத்திற்கு’
என்று தொடங்கி.
7. ‘ஐவர்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘இப்படி’ என்று தொடங்கி.
|