பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ந

மூன்றாந்திருவாய்மொழி - பா. 1

113

நிரம்பி இருக்கச்செய்தே விலகுகிறவர்கள் இருக்கிற ஊரை விட்டு, பருவம் நிரம்புவதற்கு முன்னே பகவானுடைய அனுபவமே யாத்திரையாகச் செல்லுவார் இருக்கிற ஊரில் போய்ப் புகுமித்தனை என்கிறாள். 1அவ்வூரில் பருவம் நிரம்பாத பிள்ளைகளும் அகப்பட மகரநெடுங்குழைக்காதனுடைய வடிவழகிலே தோற்று, வாய் வெருவாநிற்பர்கள். 2‘விளையாடும் இளம்பிள்ளைகளும் வீடுகளின் வாசல்களில் கூட்டங்கூடி ஒருவர்க்கு ஒருவர் இராமதோத்திர விஷயமான கதைகளையே செய்தார்கள்’ என்கிறபடியே.

    3
‘ராமோ ராமோ ராம இதி-சோறு சோறு சோறு என்பாரைப் போலே. ப்ரஜாநாம பவந் கதா:- பிறந்தவர்களுக்கு எல்லாம் பாசுரம் இதுவே. ராம்பூதம் ஜகத் அபூத்-நாடு அடங்க இராமன் ஒருவன் ஆனபடி. ‘நித்தியவிபூதியில் பரிமாறக்கடவது இங்கே பரிமாறுகைக்குக் காரணம் என்?’ என்னில், ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி-நாடு அடங்கலும் தந்தாமுடைய கர்மங்களின் பலன்களை அனுபவிக்கப் பெற்றார்கள் இல்லை; இராம்பாக்யமே அனுபவித்துவிட்டது.’ 4‘நசாக்நிஜம் பயம் கிஞ்சித்-நெருப்பும் சோறு வேக வேண்டிய உஷ்ணத்துக்கு மேற்பட உடைத்தாவது இல்லை. நாப்ஸூ

________________________________________________________________

1. ‘இளமைப்பருவத்திலும் பகவானை அனுபவிக்கின்றவர்களாய் இருப்பார்களோ?’
  எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அவ்வூரில்’ என்று தொடங்கி.

2. அவ்வாறு இருப்பார்கள் என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்’ ‘விளையாடும்’
  என்று தொடங்கி.

        ‘பாலா அபி க்ரீடமாநா க்ருஹ த்வாரேஷூ ஸங்கஸ:
        ராமாபிஷடவ ஸம்யுக்தா: சக்ருரேவ மித: கதா:
 
என்பது, ஸ்ரீராமா. அயோத். 6:16.

3. ‘சிறுவர்களே அன்றி அங்குள்ளவர் எல்லாரும் இப்படியே’ நன்று கூறுவதற்குத்
  திருவுள்ளங்கொண்டு, அதற்குப் பிரமாணமும் பிரமாண சுலோகத்திற்குப் பொருளும்
  அருளிச்செய்கிறார், ‘ராமோ ராமோ’ என்று தொடங்கி.

        ‘ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவந் கதா:
         ராம்பூதம் ஜகத்அபூத் ராமே ராஜ்யம் ப்ரஸாஸதி’

என்பது, உத்தரராமாயணம்.

4. ‘அப்படி அவர்கள் தங்களுடைய கர்மங்களின் பலன்களை அனுபவிக்கவில்லையோ?’
  என்ன, இல்லை என்பதற்குப் பிரமாணமும், பிரமாண சுலோகத்திற்குப் பொருளும்
  அருளிச்செய்கிறார், ‘நசாக்நிஜம்’ என்று தொடங்கி.

        ‘நசாக்நிஜம் பயம் கிஞ்சித் நாப்ஸூ மஜ்ஜந்தி ஜந்தவ:

என்பது, சங்க்ஷேப ராமாயணம், 1:92.