பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

இ

120

திருவாய்மொழி - ஏழாம் பத்து

இருக்க வேண்டாவோ?’ என்ன, என் வசம் அன்று இது- என் செய்வோம், 1தாய் வேறு கன்று ஆக்கும் விஷயமானால்? கைகேயி சொற்கேட்டு ஸ்ரீபரதாழ்வான் அரசினைச் செலுத்தும் அன்று ஆயிற்று, இவளும் இத்தாயார் வார்த்தை கேட்டு மீளுவது. 2‘இப்போது நான் உங்கள் மகள் அன்றோ? என்னைப் போலும் அன்றே என் நெஞ்சு?’ என்றது, 3எனக்குத் தான் என்று இருக்கும் நிலை குலைந்து, தன் வழியே நான் ஒழுகும்படியாயிற்று என்றபடி. 4‘தங்கள் தங்களுடைய மனம்  அடங்கியிராது போயினும், அடங்கியிருப்பது ஒரு போது பார்த்து ஹ்தம் சொல்ல வேண்டாவோ?’ என்ன, இராப்பகல் போய் - 5படைக்கப்பட்ட காலத்திலே இதற்கு ஹிதம் சொல்லலாவது, 6ஒரு போது காண்கின்றிலேன்; ஒருபோது பகவத்விஷயத்திலும் கைவைத்து, ஒருபோது சம்சார யாத்திரையிலும் கை வைக்கும் அளவு அன்றே, இவளுடைய ஈடுபாடு. 7இங்கே இருப்பது ஒரு போது உண்டாகில் அன்றோ ஒன்று சொல்லி மீட்கலாவது?

    தேன் மொய்த்த பூம்பொழில் தண்பணை சூழ் திருப்பேரெயில் - 8இது மீட்கலாம் விஷயத்திலோ அகப்பட்டது? அவ்வூரில் இனிமையிலே படிந்தாரையும் மீட்கப்போமோ? தேன் - வண்டு.

__________________________________________________________________

1. தாயின் தானத்திலே, தலைமகள்; கன்றின் தானத்திலே, மனம்.. ‘தாயாகிய
  கைகேசியையும், கன்றாகிய ஸ்ரீபரதாழ்வானையும் பிரிக்கக் கூடிய விஷயம்’
  என்பதும் பொருள். மேற்கூறியவதனைத் திருஷ்டாந்த மூலமாக விவரணம்
  செய்கிறார். ‘கைகேயி’ என்று தொடங்கி.

2. ‘இது’ என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார், ‘இப்போது, என்று தொடங்கி.

3. ‘என்னைப் போலும் அன்றே’ என்றதனை விவரணம் செய்கிறார் ‘எனக்கு’ என்று
  தொடங்கி.

4. மேலுக்கு அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘தங்கள் தங்களுடைய’ என்று தொடங்கி.

5. இராப்பகல் அங்கே ஈடுபட்டது என்கிறவளுடைய மனோபாவத்தை அருளிச்செய்கிறார்,
  படைக்கப்பட்ட’ என்று தொடங்கி.

6. ‘ஒரு காலம் காணாமைக்குக் காரணம் யாது?’ என்ன, ‘ஒரு போது’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

7. ‘போய்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார். ‘இங்கே’ என்று தொடங்கி.

8. ‘தேன்மொய்த்த’ என்றது முதல், ‘செங்கனி வாயின் திறத்ததுவே’ என்றது முடிய,
  பாவம் அருளிச்செய்கிறார், ‘இது மீட்கலாம்’ என்று தொடங்கி. இதனை விவரணம்
  செய்கிறார், ‘அவ்வூரில்’ என்று தொடங்கி.