பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

உன

முதல் திருவாய்மொழி - பா. 1

13

உன் பாதம் பங்கயம் - 1‘தாவி வையங்கொண்ட தடந்தாமரைகள்’ என்றும், ‘பூவார் கழல்கள்’ என்றும் சொல்லுகிற திருவடிகளை. ‘என் ஆற்றாமை அன்றோ உனக்குச் சொல்ல வேண்டுவது? சுக அனுபவத்திற்கு உரியனவான திருவடிகளையுடைய உன்னை நீ அறிதி அன்றோ?’ என்பார், ‘உன் பாத பங்கயம்’ என்கிறார். என்றது, 2‘அடி அறியாமல்தான் அகற்றுகிறாய் அன்றே? 3பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும் பாதக் கமலம் அன்றோ?’ என்பதனைத் தெரிவித்தபடி. 4சம்சாரத்தில் அருசி பிறவாதார்க்கும் விட ஒண்ணாதபடி போக்கியமான திருவடிகளை. தேனே மலரும் திருப்பாதம் அன்றோ? நண்ணிலா வகையே - 5காதாசித்கமாகக் கிட்டாது ஒழிகை அன்றிக்கே, கிட்டாது ஒழிதலே சுபாவமாக. என்றது, ‘இனி நண்ணப் புகாநின்றேமோ?’ என்றிருக்கிறார் என்றபடி. நலிவான் - 6நண்ணாமை என்றும், நலிவு என்றும் இரண்டு இல்லை இவர்க்கு; 7திருவடிகளைக் கிட்டாது ஒழிகையே இவ்வாத்துமாவுக்கு நலிவு. 8இந்தக் கொடுமையான வகையே நலிவான். இன்னம் - ‘அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா!

________________________________________________________________________

1. திருவடிகளைத் தாமரையாகச் சொன்னதற்குப் பிரமாணம் காட்டுகிறார், ‘தாவி’ என்று
  தொடங்கி. இது, திருவாம்மொழி, 6. 9 : 9. ‘பூவார்’ என்பது, திருவாய்மொழி. 6. 10 : 4.

2. ‘உன் அடி’ என்பதில், ‘அடி’ என்பதற்குத் திருவடி என்பதும். மூலம் என்பதும்
  பொருன்.

3. ‘திருவடிகளின் இனிமையை அவன் அறியும்’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
  ‘பேதைக்குழவி’ என்று தொடங்கி. இது, பெரியாழ்வார் திருமொழி, 1. 2 : 1.

4. திருவடிகளுடைய இனிமையின் எல்லையையும் அதற்குப் பிரமாணத்தையும்
  அருளிச்செய்கிறார், ‘சம்சாரத்தில்’ என்று தொடங்கி. ‘தேனே மலரும்’ என்றது,
  திருவாய்மொழி, 1. 5 : 5.

5. ‘வகையே’ என்ற ஏகாரத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார், ‘காதாசித்தமாக’ என்று
  தொடங்கி. காதாசித்தம் - யாதாயினும் ஒரு காலத்தில் உண்டானது.

6. ‘நண்ணிலா வகையே’ என்றதன் பின், ‘நலிவான்’ என்கையாலே, ‘கிட்டாமையே
  இவர்க்கு நலிவு,’ என்கிறார், ‘நண்ணாமை என்றும்’ என்று தொடங்கி.

7. ‘இவர்க்கே அன்றி, சொரூபத்தின் நிலையை ஆராய்ந்தாலும் இதுவே நலிவு’
  என்கிறார், ‘திருவடிகளை’ என்று தொடங்கி.

8. ‘இந்தக் கொடுமையான வகையே’ என்றது, ‘நண்ணிலா’ என்றதனை.