பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

மூன்றாந்திருவாய்மொழி - பா. 11

151

தாரை மீட்கலாயோ இருப்பது? 1மாயன் - சொல்லிச் சொல்லாத தேக காந்தியையும் ஆத்தும குணங்ளையும் நினைக்கிறது. அன்றிக்கே, மாயன் - 2‘அடியார்களிடத்தில் பக்ஷபாதத்தையுடையவன்’ என்னுதல்.

    நூற்றுவரை அன்று மங்க நூற்ற - சிலரை அழிக்க நினைத்தால் ஒருவரும் தப்பாதபடி அழிக்குமவன். துரியோதனன் முதலாயினோர்களைப் பாரதப்போர் உண்டான அன்று நசிக்கும்படி மந்திரித்த. நிகர் இல் முகில் வண்ணன்-ஒப்பில்லாத காளமேகம்போலே இருக்கிற வடிவழகு. இதனால், ‘விரோதியை வளர்த்தாலும் விட ஒண்ணாத வடிவழகு’ என்கை. நேமியான் - 3அடியார்களுடைய விரோதிகளைப் போக்கும் போது பகலை இரவு ஆக்கும் பரிகரத்தையுடையவன். 4திருவாழியைக் கொண்டு வீடுமன் முதலாயினோர்களையும் தொடரா நிற்பன் அன்றோ? நிகர் இல் முகில் வண்ணன் நேமியான் - 5துரியோதனன் முதலாயினோர்கட்கு மின்னும் இடியுமாய், பாண்டவர்கள் துன்பம் தீர மழைபெய்து நின்றபடி. 6‘அவன் உன் விரோதிகளைப் போக்கிக்கூட நினையாத பின்பு, அவன் தானே வந்து உன் காலிலே விழும்படி மந்திரத்தாலோ?’ என்ன, என் நெஞ்சம் கவர்ந்து எனை ஊழியானே - அதற்கு ஈடான பரிகரத்தை நான் இழந்து எத்தனை காலம் உண்டு? வடிவழகையும் ஆயுதச் சேர்த்தியையும் காட்டி என் நெஞ்சினைக் கவர்ந்து போய் எத்தனை காலத்தான்? எனை

_______________________________________________________________________

1. மாயன்-ஆச்சரியத்தையுடையவன். இன்ன காரணத்தால் என்று விசேடியாமல்
  பொதுவிலே ‘மாயன்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘சொல்லி’ என்று
  தொடங்கி.

2. ‘நூற்றுவரை’ என்றதனைக் கூட்டி, ‘மாயன்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
  ‘அடியார்களிடத்தில்’ என்று தொடங்கி.

3. ‘நேமியான்’ என்பதனை ‘நூற்றுவரை’ என்றதனோடு கூட்டி, பாவம்
  அருளிச்செய்கிறார், ‘அடியார்களுடைய’ என்று தொடங்கி.

4. அடியார்களானாலும் அடியார்களுக்கு விரோதிகளாகில் நேமியைக்கொண்டே
  வெல்வது’ என்கிறார் ‘திருவாழியை’ என்று தொடங்கி.

5. ‘நிகர் இல் முகில் வண்ணன்’ என்றதனை, ‘நூற்றுவர்’ என்றதனோடு கூட்டி, பாவம்
  அருளிச்செய்கிறார், ‘துரியோதனன்’ என்று தொடங்கி.

6. ‘என் நெஞ்சம் கவர்ந்து’ என்பதற்கு அவதாரிகை அருளிச்செய்கிறார், ‘அவன் உன்’
  என்று தொடங்கி.