1இர
|
160 |
திருவாய்மொழி
- ஏழாம்
பத்து |
1இராவணனைப்போலே
எதிரி ஆக்கிக் கொல்லாதே குணங்கள் சில உண்டாகையாலே நின்ற நிலையிலே தோற்பித்துக் கொண்டபடி.
2நாயகனுக்கு அடியார் அன்றோ வென்று கொடுப்பார்? ஆழி எழ - 3‘மூன்று
உலகங்களையும் காற்கீழே இட்டுக்கொள்ள வேணும்’ என்னும் கறுவுதல் உள்ளது சர்வேஸ்வரனுக்கே அன்றோ?
அந்த எண்ணம் இன்றிக்கே இருக்கச்செய்தேயும் அவனுக்கு முன்பே பரிகரம் முற்பட்டபடி. 4‘காட்டுக்குப்
போம்’ என்று நியமித்தது பெருமாளையேயாயிருக்க. இளையபெருமாள் முற்பட்டாற்போலே. ‘புண்ணியசீலரும்
சிநேகிதர்களுக்குச் சந்தோஷத்தைச் செய்கிறவரும் சுமித்தரையின் புத்திரருமான இளையபெருமாள்,
தமையனாருக்குப் பின்னே செல்லும்பொருட்டு முன்னரே மரவுரியினால் தம்மை அலங்கரித்துக்கொண்டார்’
என்கிறபடியே, போக்குக்குத் தகுதியாக முற்கோலி அலங்கரித்துக்கொண்டு நின்றார் அன்றோ?
______________________________________________________________________
1. ‘அவனைக்கொன்றுவிடலாகாதோ?’
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘இராவணனைப்போலே’ என்று தொடங்கி.
2. முதல் முன்னம் திவ்விய
ஆயுதங்களைச் சொல்லுவதற்கு ரசோக்தியாகக் கருத்து
அருளிச்செய்கிறார், ‘நாயகனுக்கு’ என்று தொடங்கி.
‘அடியார்’ என்றது,
திருவடிகளையும் தொண்டர்களையும்.
3. ‘இறைவன் இருக்க, ஆழி
எழுவான் என்?’ என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘மூன்று உலகங்களையும்’ என்று தொடங்கி.
என்றது,
பிரிவினாலே என்றபடி.
4. ‘பரிகரம் முற்பட்ட
இடம் உண்டோ?’ என்ன, ‘காட்டுக்கு’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார். அங்ஙனம்
முற்பட்டதற்குப் பிரமாணம் காட்டுகிறார்,
‘புண்ணிய சீலரும்’ என்று தொடங்கி.
‘ப்ராகேவ து மஹாபாக:
ஸௌமித்ரி: மித்ராந்தந:
பூர்வஜஸ்ய அநுயாத்ரார்த்தே
த்ருமசீரை: அலங்க்ருத:’
என்பது, ஸ்ரீராமா. சுந். 33 : 28.
இது, திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
இச்சுலோகத்தில் ‘ப்ராகேவ’ என்றதனைக் கடாட்சித்து,
‘முற்கோலி’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார்.
5. ‘மற்றைய
ஆயுதங்கள் இருக்க, திருவாழி முற்படுவான் என்?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார்,
‘தோற்றத்திலே’ என்று தொடங்கி. தோற்றத்திலே
-தொடக்கத்திலே. அரசு போர்-அரசர் செய்கின்ற
போர்.
|