பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

நான்காந்திருவாய்மொழி - பா. 1

165

கொண்டது? 1பூவை இட்டுப் பூவை கொண்டான்காணும். 2அப்படுக்கையிலே பொருந்தும் சௌகுமார்யத்தையுடையவன் இக்காடும் ஓடையுமான உலகத்தினை அளக்கப்புக்கால், இவர்களுக்கு இப்படிப்படவேண்டாவோ? அவன் இப்படி அளவாநின்றால் இவர்கள் பேசாது இரார்கள் அன்றோ?’ 3‘மூன்று அடிகளால் முறையே மூன்று உலகங்களையும் ஒரு கணநேரத்திற்குள் ஆக்கிரமித்தவராய் விளங்குகிற திவ்விய ஆயுதங்களையுடையவராய் எந்தத் திரிவிக்கிரமனாக ஆனானோ அந்த வாமனன் உன்னை எப்போதும் காக்கக் கடவன’ என்கிறபடியே.

    திசை வாழி எழ - 4‘அவனுக்கு என் வருகிறதோ?’ என்று ஆயிற்றுத் திவ்விய ஆயுதங்கள் கிளர்கின்றன! ‘அவைதமக்கு என் வருகிறதோ?’ என்று ‘வடிவார் சோதி வலத்து உறையும் சுடராழியும் பல்லாண்டு, படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே’ என்னாநிற்பார்கள் அன்றோ? ‘நின் கையில் வேல் போற்றி!’ என்று வேல் தனக்கும் பரியவேண்டி இருக்குமன்றோ? அன்றிக்கே, 5திக்குகள்தோறும் அநுகூலருடைய’ வாழி

____________________________________________________________________

1. ‘பூவை இட்டு’ என்று தொடங்கும் வாக்கியம் சிலேடை; பூவை இட்டு-மலர்
  போன்ற திருவடிகளைக்கொண்டு. பூவை-பூமியை என்றபடி.

2. ‘அவன் அளந்தால் இவர்கள் இப்படிப் படவேண்டுமோ?’ என்ன,
  ‘அப்படுக்கையிலே’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். ‘அவன்
  இப்படி’ என்றது, சிலேடை; படி-பிரகாரமும், பூமியும், ஜீவனமும்.

3. திவ்விய ஆயுதங்கள் புறப்பட்டமைக்கு, வேறும் ஒரு பிரமாணம் காட்டுகிறார்,
  ‘மூன்று அடிகளால்’ என்று தொடங்கி.

    ‘வாமநோ ரக்ஷது ஸதா பவந்தம் ய: க்ஷணாத் அபூத்
     த்ரிவிக்ரம: க்ரமாக்ராந்த த்ரைலோக்ய: ஸ்புரதாயுத:’

  என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா. 5. 5.:17. இதிலே ‘ஸ்புரதாயுத:’ என்பதுவே இங்கே
  வேண்டுவது.

4. ‘ஆழி எழச் சங்கும் வில்லிமு எழ’ என்றதன் பின் ‘திசை வாழி எழ’
  என்கையாலே, ‘திவ்விய ஆயுதங்களுக்கு மங்களாசாசனம் செய்கிறார்கள்’
  என்கிறார், ‘அவனுக்கு’ என்று தொடங்கி. ‘வடிவார்’ என்பது திருப்பல்லாண்டு.
  ‘நின்கையில்’ என்பது, திருப்பாவை.

5. ‘சர்வேஸ்வரன் விஷயமாக மங்களாசாசனம் செய்கிறார்கள்’ என்று வேறும் ஒரு
  கருத்து அருளிச்செய்கிறார், ‘திக்குகள்தோறும்’ என்று தொடங்கி.