New Page 1
|
நான்காந்திருவாய்மொழி - பா. 1 |
167 |
கையிலே பருத்தி பட்ட
பன்னிரண்டும் படுகிற பூமியை நீர் ஏற்கும் போது இப்படிப் படவேணுமோ?’ என்கிறார்.
அண்டம் மோழை எழ
- 1இந்திரனுக்காக மூன்று உலகமித்தனையும் அளந்து கொடுப்பதாக அன்றோ தொடங்கியது?
கணிசம் அவ்வளவு அல்லாமையாலே அண்டத்தின் இடமுள்ள அளவும் சென்று அளந்து, அண்டகடாஹத்திலே திருவடி
சென்று, ‘ஒண்மிதியிற் புனல் உருவி ஒருகால் நிற்ப’ என்கிறபடியே கீழேயுள்ள அண்டகடாஹத்தை
உருவி நிற்க, கீழேயுள்ள ஆவரணஜலம் மேலே எழ. 2ஆவரண ஜலத்துக்கு நடுவே ஒரு கழல்போலே
மிதக்குமித்தனை அன்றோ அண்டம்? 3‘இரட்சகமான செயலே பாதகமாகிறதோ?’ என்று அஞ்ச
வேண்டும்படி அன்றோ அப்போதைக் கறுவுதல்’ மோழை-குமிழி. முடி பாதம் எழ-திருமுடியளவும் திருவடிகள்
கிளர. ‘முடிமேலே பாதம் எழ’ என்றும் சொல்லுவர்கள் நிருத்த லக்ஷணத்துக்காக. அப்பன் ஊழி எழ -
4மஹாபலி தகுதி இல்லாமல் அரசு நடத்துகையால் வந்த பொல்லாக் காலமானது போய்,
நல்லடிக் காலமாயிற்று; நல்லடிக்காலம் கிளரும்படி.
______________________________________________________________________
திருவந். 16. ‘மார்பாரப் புல்கி
நீ உண்டு உமிழ்ந்த’ என்றதனைக் கடாட்சித்துப்
‘பருத்தி பட்ட பன்னிரண்டும் படுகிற பூமியை’
என்கிறார். ‘சீராற் பிறந்து சிறப்பால்
வளராது பேர்வாமன் ஆகாக்கால்’ என்றதனைக் கடாட்சித்து,
‘இப்படிப்
படவேணுமோ?’ என்கிறார். பருத்தி பட்ட பன்னிரண்டும் படுகையாவது, தான்
விரும்பிச்
செய்கிற எல்லாச் செயல்களுக்கும் உரியதாயிருத்தல்.
1. அண்டம் குமிழி எழுவதற்கு
வகை அருளிச்செய்கிறார், ‘இந்திரனுக்காக’ என்று
தொடங்கி, கணிசம்-எண்ணம். ‘ஒண்மிதியில்’
என்ற திருப்பாசுரம்,
திருநெடுந்தாண்டகம், 5.
2. ‘அண்டத்துக்குக் கீழே
தண்ணீர் உண்டோ?’ என்ன, ‘ஆவரண ஜலத்துக்கு’ என்று
தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
கழல்-கழல் கோடி.
3. ‘அவன் செயல் பாதுகாத்தலுக்குக்
காரணமாக இருக்க, இப்படிக் கலங்க
வேண்டுவான் என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
‘இரட்சகமான’
என்று தொடங்கி.
4. ‘ஊழி எழ’ என்பதற்கு ‘பொல்லாக்காலம் கழிய’ என்று கொண்டு பொருள்
அருளிச்செய்கிறார், ‘மஹாபலி’
என்று தொடங்கி. நல்லடிக்காலம்-நன்மைக்கு
மூலமான காலம்.
|