பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

நான்காந்திருவாய்மொழி - பா. 3

171

ஒரு குறை வாராதே. ஏழு தீவுகளும் சலித்தன இல்லை: தனது தனது இடத்தில் இருந்தன ஆயின. பின்னும் - அதற்கு மேலே, நான்றில ஏழ்மலை தானத்தவே - 1பூமிக்கு ஆணி அடித்தாற்போலே இருக்கிற ஏழு குல மலைகளும் ஒன்றும் குலையாமல் தன்தன் இடத்தில் நிற்கும்படி. என்றது, 2‘ஒரு கோத்ர ஸ்கலனம் பிறந்தது இல்லை’ என்றபடி. ‘பின்னும் பின்னும்’ என்று வருவதற்குக் கருத்து, ‘இவற்றிலே ஒரு செயலே அமையுங்கண்டீர்! அதற்கு மேலே இவையும் செய்தான்’ என்கைக்காக. நான்றில ஏழ்கடல் தானத்தவே - 3அவைதாம் கடினத்தன்மையாலே குலையாதே ஒழிந்தன என்னவுமாம் அன்றோ? அதுவும் இல்லை அன்றோ இதற்கு? நீர்ப்பண்டம் அன்றோ தண்ணீர்? அதுவும் தன் இடத்திலே கிடக்கும்படியாக. 4அவற்றின் கடினத்தன்மையும் இதனுடைய நெகிழ்ச்சித் தன்மையும் பயன் அற்றவை; ‘அவன் திருவுள்ளக் கருத்து யாது ஒன்று? அதுவே காரியமாக முடிவது,’ என்கை. 

    ‘இவை இப்படிக் கிடத்தல் அவன் குறிக்கோளுடையவனாய்க் கொண்டு காப்பாற்றும் போதோ?’ என்னில், ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே-மாறுபடுருவத்தைக்கும்படியாகக் குத்தி. அண்டபித்தியினின்றும் ஒட்டு விடிவித்து எடுத்து ஏறட்டு, எயிற்றிலே எற்றிக்கொண்டு செயல் செய்தபோது: 5‘மண்ணெலாம் இடந்து எடுத்து மதங்கள் செய்து’ என்கிறபடியே. 6அவன் இப்படி முக்கியமாகக் காக்கப் புக்கால் அவை சலிக்கமோ?

_____________________________________________________________________

1. பூமியைச் சொன்ன பின் மலையைச் சொல்லுவதற்கு பாவம் அருளிச்செய்கிறார்,
  ‘பூமிக்கு’ என்று தொடங்கி.

2. ரசோக்தியாக அருளிச்செய்கிறார், ‘ஒரு’ என்று தொடங்கி. கோத்ரம்-மலை. ‘பெயரும்,
  கோத்ரமும்’ என்பது வேறும் ஒரு பொருள். ஸ்கலனம் - நழுவுதல்.

3. மேற்கூறியவை போல அன்றிக்கே, நாலாமைக்கும் அசம்பாவிதமானவையும்
  நாலாதே தம் இடத்தே கிடக்கும்படி செய்த ஆற்றலை அருளிச்செய்கிறார்,
  ‘அவைதாம்’ என்று தொடங்கி.

4. மேலே கூறிய வாக்கியத்தால் பலித்த பொருளை அருளிச்செய்கிறார், ‘அவற்றின்’
  என்று தொடங்கி.

5. அப்படி ஊன்றி இடந்ததற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘மண்ணெலாம்’ என்று
  தொடங்கி. இது, பெரிய திருமொழி, 3. 4 : 3.

6. ரசோக்தியாக அருளிச்செய்கிறார், ‘அவன்’ என்று தொடங்கி. ‘முக்கியமாக’
  என்றதற்கு, ‘முகத்தின் சம்பந்தத்தையுடையனவாக’ என்பதும், ‘சிறப்பாக’
  என்பதும் பொருள்.