இல
|
நான்காந்திருவாய்மொழி - பா.
4 |
173 |
இல்லை: சூரிய சந்திரர்கள்
இல்லை; வேறு ஒன்றும் இல்லை; பிரஹ்மம் ஒன்றே சமஷ்டி புருஷரூபமாய் இருந்தது,’ என்கிறபடியே.
எழ.பேர. ஆண்டு என்றும், மாதம் என்றும், நாள் என்றும், கலை என்றும், காஷ்டை என்றும்
சொல்லுகிறவை எல்லாம் சூரியனுடைய செல்லுதல் வருதலாலே வருகின்றனவை அன்றோ? பாகுபாட்டைச் செய்கிற
சூரியன் உள்ளே புக்கால் பாகுபடுத்தப்படுகின்ற இவையும் போமித்தனை அன்றோ? நிலம் நீரும் எழ-
1காரணங்களோடு காரியங்களோடு வாசி அற உள்ளே புக. 2காரியம் உள்ள
இடத்தே காரணம் தொடர்ந்து நிற்றலைக் காணாநின்றோம்; 3‘மாமாயை . . . . . .
. .மங்க ஒட்டு’ என்று பிரகிருதி தத்துவத்தைச் சொல்லா நிற்கச்செய்தே, ‘இங்கு இவ்வுயிர் ஏய்
பிரகிருதி’ என்று சொல்ல நின்றாரே அன்றோ? 4இதுதான் காரணத்திலே போகாமைக்ககா.
____________________________________________________________________
‘நஅஹ: நராத்ரி: நநப;
நபூமி; நஆஸீத்தம; ஜோதி: அபூத்நச அந்யத்
ஸ்ரோத்ராதிபுத்யா அநுப
லப்தம்ஏகம் ப்ராதாநிகம் பிரஹ்ம புமாந்ததா ஆஸீத்’
என்பது, ஸ்ரீவிஷ்ணு புரா, 1. 2 :
25. இது, மஹாபிரளயத்துக்குப் பிராமணம். ‘ந அஹ:
நராத்ரி;’ என்பது மாத்திரமே அவாந்தர பிரளயத்துக்குப்
பிரமாணம்.
1. ஐம்பெரும்பூதங்களும் அண்டத்துக்குப்
புறம்பான போது காரணங்களாய்,
அண்டத்துக்கு உள்ளான போது காரியங்களாய் இருக்குமாகையாலே,
‘காரணங்களோடு
வாசி அற’ என்கிறார்.
2. ‘நிலம் நீரும் எழ’ என்றது,
காரியமான பூதங்களை அன்றோ சொல்லுகிறது?
காரணங்களையும் இதற்குப் பொருள் ஆக்கும்போது காரியத்திலே
காரணம்
உண்டோ?’ என்ன, ‘காரியம் உள்ளவிடத்தே’ என்று தொடங்கி அதற்கு விடை
அருளிச்செய்கிறார்.
3. இங்ஙனம் கூறுவதற்குக்
காரணத்தை அருளிச்செய்கிறார், ‘மாமாயை’ என்று
தொடங்கி. ‘என்றது, என் சொல்லியவாறோ?’
எனின், ‘மங்கஒட்டு உன் மாமாயை’
என்று மூலப்பகுதியைச் சொல்லச் செய்தேயும், ‘இங்கு இவ்வுயிர்
எய் பிரகிருதி’
என்று தூல சரீரத்தோடு கூடியிருக்கின்ற சேதநர்களுடைய பிரகிருதி என்று காரண
அமிசத்தைப்
பிரித்துச் சொன்னாரேயன்றோ? இந்தக் காரண அமிசமானது
மூலப்பகுதியாய்ப் போகாமைக்காக என்பதனைத்
தெரிவித்தபடி. இது, திருவாய்.
10. 10:3.
4. ‘இது தான்’
என்றது, ‘தூல சரீரத்தோடு கூடுயிருக்கின்ற சேதநர்களையுடைய காரண
அமிசமான இந்தப் பிரபிருதிதான்’
என்றபடி. ‘காரணத்திலே போகாமைக்காக’
என்றது, ‘மூலப்பகுதியாய்ப் போகாமைக்காக’ என்றபடி.
|