பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

ஈ

நான்காந்திருவாய்மொழி - பா. 8

181

    ஈடு : எட்டாம் பாட்டு. 1வாணன் திண்தோள்களைக் கோண்ட வெற்றிச் செயலை அருளிச்செய்கிறார்.

    கோழிக்கொடி கொண்டான் நேர் சரிந்தான் - மயிலைக் கொடியிலேயுடையனாய்த் தேவசேனாதிபதியாய் 2இளமறியாய்த் தூசித்தலையிலே நின்ற சுப்பிரமணியன் தோற்றரவிலே கெட்டான். பின்னும் நேர் சரிந்தான் எரியும் 3அனலோன் - அவ்வளவிலே நாற்பத்தொன்பது அக்கினிகளும் பெரிய கிளர்த்தியோடே எரிந்து தோன்றின: அவையும் எல்லாம் பின்னிட்டன. பின்னும் நேர் சரிந்தான் முக்கண் மூர்த்தி - 4‘மகன் கொடி கட்டிக்கொண்டு சென்று இளிம்புபட்டான்’ என்று தன் கொடியைப் போகட்டு வந்து தோற்றின உடனேயே, கண்ணைப் புதைத்துக் கெட்டு ஓடத் தொடங்கினான். 5அவன் மறைத்துக்கொண்டு போக, இவர், ‘முக்கண் மூர்த்தி கண்டீர்’ என்று கண்ணைக் காட்டிக் கொடுக்கிறார். 6எல்லாம் செய்தாலும் உடம்பில் அடையாளத்தை மறைக்கப் போகாதே அன்றோ? 7‘வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களைத் துணித்த நாள் அந்த அந்த ஆகுலம்’ என்கிறபடியே, பாசுரம் இட்டுச் சொல்ல ஒண்ணாத வியாகுலம் அன்றோ அது?

    அப்பன் - காரணம் இல்லாமலே பாதுகாப்பவன். நேர்சரி வாணன் - 8பிரதானனான வாணன் தான் வந்து தோற்றினான்;

_____________________________________________________________________

1. ‘வாணன் திண்தோள் கொண்ட அன்று’ என்றதனைக் கடாட்சித்து அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

2. இளமறி - இளங்குட்டி, ‘தோற்றரவிலே கெட்டான்’ என்றது, ‘நேர் சரிந்தான்’
  என்றதன் பொருள்.

3. ‘அனலோன்’ என்பது, தொகுதியொருமை.

4. முருகனுக்குக் கொடியைச் சொல்லி, சிவனுக்கு நெற்றிக்கண்ணைக் கூறியதற்குக்
  கருத்து அருளிச்செய்கிறார், ‘மகன்’ என்று தொடங்கி. இளிம்பு படுதல் -
  எளிமைப்படுதல்.

5. ‘கண்டீர்’ என்றதற்குக் கருத்து அருளிச்செய்கிறார், ‘அவன்’ என்று தொடங்கி.

6. ‘அவன் மறைத்துக்கொண்டு போனமை இவர்க்குத் தெரியுமோ?’ என்ன, ‘எல்லாம்’
  என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

7. ‘கண்ணைப் புதைத்துக்கொண்டு ஓடும்படியான துன்பம் உண்டோ?’ என்ன, ‘வாணன்’
  என்ற தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். இது. திருச்சந்த விருத்தம், 70.

8. நேர்தல் - என்பது ஒத்தலாதலின், கருத்துப் பொருளாகப் ‘பிரதானனான’ என்று
  பொருள் அருளிச்செய்கிறார்.