த
|
நான்காந்திருவாய்மொழி - பா.
8 |
183 |
திண்தோள் கொண்ட -
1‘உஷை தந்தை அற்றவள் ஆக ஒண்ணாது’ என்று கரத்தைக் கழித்துவிட்டான். ‘கர பாதை
அன்றோ இவனைக் கண்டார் கால்களில் எல்லாம் விழச் செய்தது’ என்று அவனுக்குள்ள கரத்தைக் கழித்து,
இறையிலியாக்கிவிட்டான். 2‘எந்தக் கைகள் அந்தப் பகவானைப் பூஜிக்கின்றனவோ
அவைதாம் கைகள்’ என்றும், 3‘சர்வேஸ்வரனை வணங்கும்பொருட்டு விசித்திரமான இந்தச்
சரீரமானது படைக்கப்பட்டது’ என்றும் விதித்துக் கிடக்கச் செய்தேயும், ஆயிரங்கைகளையும் கொண்டு
சம்பந்தம் இல்லாத விஷயத்திலே காரியங்கொள்ளுகையாலே அவற்றையே கழித்துவிட்டான். 4அந்தத்
தேவதைதானே வந்து, ‘வரம் தந்த நீயே அதனைக் கழிக்கவோ? நீ இவனைக் கொல்லில் என் காலிலே
குனிவார் இல்லை இனி’ என்று பல்லைக் காட்டுகையாலே விட்டான்.
5‘கிருஷ்ண
கிருஷ்ண மஹா பாஹோ’- ‘தேவரை உள்ளபடி அறியாதே அம்பை விட்டுக்கொண்டு நின்ற நிலையைக் கண்டு
____________________________________________________________________
1. தலையை அறுக்காததற்கு
இரண்டாவது காரணத்தை அருளிச்செய்கிறார், ‘உஷை’
என்று தொடங்கி. கரம் - கையும், கப்பமும்,
இறையிலியாக்கி - இறையிறுப்பு
இல்லாதவனாக்கி என்பதும், வேறு தெய்வம் இல்லாதவனாக்கி என்பதும்
பொருள்.
2. ‘மற்றை அவயவங்கள்
இருக்கக் கைகளைக் கழிப்பான் என்?’ என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார், ‘எந்தக் கைகள்’
என்று தொடங்கி.
‘ஸா ஜிஹ்வா யாஹரிம்
ஸ்தௌதி தத்சித்தம் யத்ததர்பிதம்
தாவேவ ச கரௌ
ஸ்லாக்யௌ யௌ தத் பூஜா கரௌ கரௌ’
என்பது, ஸ்ரீவிஷ்ணு தர்மம். இங்கே,
சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையில் வருகின்ற
‘மூவுலகும்’, ‘மடந்தாழும்’, ‘பெரியவனை’ என்ற
தாழிசைகளை ஒப்பு நோக்கல் தகும்.
3. ‘விசித்ரா தேஹஸம்பத்தி:
ஈஸ்வராய நிவேதிதும்’ என்பது, ஸ்ரீவிஷ்ணு தர்மம்.
4. தலையை அறுக்காததற்கு
மூன்றாவது காரணத்தை அருளிச்செய்கிறார், ‘அந்தத்
தேவதை’ என்று தொடங்கி.
5. அப்படிக் காட்டித் துதித்ததற்குப்
பிரமாணம் காட்டுகிறார், ‘க்ருஷ்ண’ என்று தொடங்கி.
‘க்ருஷ்ண க்ருஷ்ண
மஹாபாஹோ ஜாநேத்வாம் புருஷோத்தமம்
பரேஸம் பரமாத்மாநம்
அநாதி நிதனம் பரம்’
என்பது, ஸ்ரீ விஷ்ணு புரா.
5. 33 : 41. ‘மஹாபாஹோ, த்வாம் புருஷோத்தமம்., ஜாநே’
என்று ‘தோள்வலி கண்ட பின்பு உன்னைச்
சர்வேஸ்வரன் என்று அறிந்தேன்’
என்னும் சிவனுடைய மறுதலை எண்ணத்தால் தோன்றும் பாவத்தை
அருளிச்செய்கிறார்,
‘தேவரை’ என்று தொடங்கி.
|