உதக
|
ஐந்தாந்திருவாய்மொழி - பா. 1 |
201 |
உதகா நத்ய: - நீரோடு,
அந்நீரில் விழுகிறாரோடு வாசி அற்றபடி. உபதப்தமாகையாவது, கரையரும் கிட்ட ஒண்ணாதபடியாய்
இருக்கை. பல்வலாநி ஸராம்ஸிச - இதில், சிறுமை பெருமை என்று ஒரு வாசி இல்லை, ‘வனம் என்ன
உபவனம் என்ன’ என்பது போலே.
ஒன்று இன்றியோ -
எல்லாவற்றையும் என்கிறது அன்று; மேலே ‘முற்றவும்’ என்று முழுவதும் என்ற பொருளைக் காட்டுகிற
சொல் உண்டாகையாலே. இனி, ‘ஒன்று இன்றியே’ என்கிறது, ‘பேற்றுக்குத் தகுந்ததாய் இருப்பது ஒரு
சாதனம் இன்றிக்கே இருக்கச்செய்தே’ என்றபடி. 1பெறுகிற தன் சிறுமையையும் பேற்றின்
கனத்தையும் பார்த்தால். தன் பக்கல் ஒரு சாதனம் இன்றிக்கே இருக்கும் அன்றோ? 2பரம
பத்தியோடு அவனே உபாயமானதோடு வாசி இல்லை. பேற்றைப் பார்த்தால் இத்தலையில் ஒன்றும்
சொல்ல ஒண்ணாமைக்கு. 3இனி, அங்கீகாரத்துக்குக் காரணமாய் இருப்பது ஒரு சாதனம்
இன்றிக்கே இருக்க. யாது ஒன்றாலே பலம் உண்டாயிற்று, அதுவன்றோ சாதனம்! அதாவது, ‘திருவயோத்யையினின்றும்
குடிவாங்க நினைவு இல்லை’ என்கிற இதுவன்றோ?
நற்பால் அயோத்தியில்
- நல்ல இடத்தையுடைத்தான திருவயோத்தியில். பால் - இடம். 4இதனால், ‘நிலமிதியே
இராம பத்தியை விளைக்கும்’ என்கை. ‘இந்தத் தேசமானது விரும்பின
_____________________________________________________________________
1. ‘அயோத்தியில் வாழ்தலே
ஒரு சாதனமாக இருக்க, ‘ஒன்று இன்றியே’ என்கிறது
என்?’ என்ன, ‘பெறுகிற’ என்று தொடங்கி அதற்கு
விடை அருளிச்செய்கிறார்.
2. இதனைக் கிம்புநர் நியாயத்தாலே
சாதிக்கிறார், ‘பரம பத்தியோடு’ என்று தொடங்கி.
3. ‘ஆனால், ‘தேஸோயம்
ஆர்வ காமதுக்’ என்றதற்குக் கருத்து யாது?’ என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இனி’ என்று
தொடங்கி. என்றது, தேசவாசம்
வியாஜ மாத்திரமாகையாலே, ‘தேஸோயம் ஸர்வ காமதுக்’ என்றது, தேசத்தின்
பெருமையைக் கூற வந்தது என்றபடி. ‘சதனம்’ என்றது, ‘வியாஜம்’ என்றபடி.
4. ‘நற்பால்’ என்றதனால்
பலித்த பொருளை அருளிச்செய்கிறார், ‘இதனால்’ என்று
தொடங்கி. ‘நிலத்தின் தன்மையே இராம
பத்தியை விளைக்கும்’ என்பதற்குப்
பிரமாணம் காட்டுகிறார், ‘இந்தத் தேசமானது’ என்று தொடங்கி.
‘பவித்ரம் பரமம்
புண்யம் தேஸோயம் ஸர்வ காமதுக்’ என்பது, கருடபுராணம், 11.
‘மானத்து வண்ட லுழவோர்
எழுத்தின் வடிவுற்றசீர்
மானத் துவண்ட வினையான
ராயினு மால்வளர்வி
மானத் துவண்டல மாமரங் கம்வழி
யாவரினும்
மானத்து வண்டமர் தாரண்ட
ராம்பதம் வாய்க்குமங்கே.’
என்பது, திருவரங்கத்தந்தாதி.
|